- Advertisement -
ஆசிய கோப்பை

நம்பர் ஒன் இந்தியாவின் உண்மையான கலர் அம்பலமாகிடுச்சு.. பாகிஸ்தானை அவமதித்தது பற்றி லதீப், அக்தர்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்ற இந்தியா போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்காதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கை எய்தினர்.

அதற்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்து பதிலடி கொடுத்தது வேறு கதை. அதற்கு பதிலடியாக இப்போட்டியில் இந்திய கேப்டன் சூரியகுமார் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு கை கொடுக்கவில்லை. மேலும் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் வீரர்கள் கை கொடுப்பதற்காக ஜென்டில்மேன்களாக காத்திருந்தனர்.

- Advertisement -

இந்தியாவின் உண்மையான நிறம்:

இருப்பினும் அவர்களுக்கு கை கொடுக்காமல் சூரியகுமார் மற்றும் சிவம் துபே ஆகியோர் வெளியேறினார்கள். அதே போல இந்திய அணியினர் பாகிஸ்தானுக்கு கை கொடுக்காமல் தங்களுடைய பெவிலியனை அடைத்தனர். அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா போட்டியின் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவை புறக்கணித்தார்.

இந்நிலையில் தங்களுக்கு கை கொடுக்காத இந்தியாவின் உண்மையான முகமும் நிறமும் அம்பலப்பட்டுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லத்தீப் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “ஆம் நீங்கள் இந்திய கிரிக்கெட். ஆம் நீங்கள் உலகின் மிகச்சிறந்த அணி. ஆனால் போட்டியின் முடிவில் கை கொடுக்காதது உங்களுடைய உண்மையான நிறத்தைக் காட்டுகிறது. பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்திய வீரர்கள் உடைமாற்றும் அறைக்குள் சென்றனர். ஐசிசி எங்கே?” என்று விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சோயப் அக்தர் விமர்சனம்:

அதே போல முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அத்தர் இந்தியாவை சாடியது பின்வருமாறு. “அதைப் பார்த்து எனக்குப் பேச்சு வரவில்லை. வியப்பாக இருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. கிரிக்கெட் போட்டியை வெற்று அரசியல் ஆக்காதீர்கள். உங்களைப் பற்றி நாங்கள் நல்ல விஷயங்களை சொன்னோம். கை கொடுக்காதது பற்றி நிறைய பேசுகிறோம். பொதுவாக வீடுகளுக்குள் சண்டை நடப்பது சகஜம்”

இதையும் படிங்க: ஜென்டில்மேனாக நின்ற பாகிஸ்தானுக்கு கை கொடுக்காமல் சென்றது ஏன்? இந்திய கேப்டன் சூரியகுமார் விளக்கம்

“அதை நீங்கள் மறந்து விட்டு முன்னோக்கி செல்ல வேண்டும். கிரிக்கெட்டில் உங்களுடைய கையை குலுக்கி பெருந்தன்மையை காட்ட வேண்டும். அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா பரிசளிப்பு விழாவுக்கு செல்லாமல் நடந்து கொண்டது மிகவும் சரியான விஷயம்” என்று கூறினார். அத்துடன் கம்ரான் அக்மல் உள்ளிட்ட நிறைய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் அந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -