- Advertisement -
ஐ.பி.எல்

அவர் வந்தாலும்.. சிஎஸ்கே தோனி இருக்கும் வரை.. ஆர்சிபியால் கோப்பையை தொடக் கூட முடியாது.. ரசித் லதீப்

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு எதிர்கொள்கிறது. 2008 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் பெங்களூரு அணியால் அனில் கும்ப்ளே, விராட் கோலி ஆகியோரது தலைமையில் கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

அந்த சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாக கேப்டனாக இருந்த டு பிளேஸிஸை இம்முறை பெங்களூரு அணி கழற்றி விட்டுள்ளது. அவருக்கு பதிலாக இளம் வீரர் ரஜத் படிதார் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக பெங்களூரு அணிக்காக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 2024 – 25 சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் கேப்டனாக மத்தியப்பிரதேச அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

தோனி இருக்கும் வரை:

எனவே இம்முறை அவரது தலைமையில் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஆர்சிபி ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னோட்டத்தை பற்றி பாகிஸ்தானில் உள்ள ஜிஇஓ எனும் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது. அதில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அகமது சேசாத், ரசித் லதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய முகமது அமீர் விளையாடினால் ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று சேசாத் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அமீர் ஆர்சிபி அணிக்காக விளையாடினால் அவர்கள் ஐபிஎல் கோப்பையை வெல்லக்கூடும்” எனக் கூறினார்.

- Advertisement -

பெங்களூரு கோப்பை வெல்லாது:

அதற்கு ரசித் லதீப் கொடுத்த அதிரடியான பதில் பின்வருமாறு. “சிஎஸ்கே அணியில் தோனி இருக்கும் வரை ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை தொட்டுப் பார்ப்பதைக் கூட நினைக்கக் கூடாது” என்று கூறினார். இதற்கான காரணம் என்னவெனில் கடந்த காலங்களில் பெங்களூரு அணிக்கு எதிராக தோனி தலைமையிலான சென்னை அணி அபாரமாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஷமி சொல்ற மாதிரி.. ரிவர்ஸ் ஸ்விங் பெற இதை அனுமதிங்க.. ஐசிசிக்கு சௌதீ, பிளாண்டரும் கோரிக்கை

குறிப்பாக 2011 ஐபிஎல் ஃபைனலில் பெங்களூரு அணியை தோற்கடித்து ஒருதலைப்பட்சமாக சென்னை கோப்பையை வென்றது. 2018 தொடரில் தனி ஒருவனாக பெங்களூரு அணியை தோனி அபாரமான இன்னிங்ஸ் விளையாடி தோற்கடித்தார். அதையே லதீப் இப்படி கலகலப்பாக கூறியுள்ளார். இருப்பினும் கடந்த வருடம் கடைசி போட்டியில் சிஎஸ்கே அணியை நாக் அவுட் செய்து பெங்களூரு பிளே ஆஃப் சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -