IPL 2023 : ஐ.பி.எல் பைனல் முடிந்ததும் பரிசளிப்பு விழாவில் கூட கலந்து கொள்ளாமல் இரவோடு இரவாக பறந்த வீரர் பற்றி தெரியுமா?

Dhoni
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. அகமதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

CSK 2023

- Advertisement -

இதன் மூலம் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியானது ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்துள்ளது. அதோடு கடந்த ஆண்டு ஒன்பதாவது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி மீண்டும் தங்களது கம்பேக்கை பலமாக கொடுத்து தாங்கள் எப்பேர்பட்ட அணி என்பதையும் வெளிக்காட்டி இருந்தது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது அகமதாபாத் நகரில் கடந்த மே 28-ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி ரிசர்டே வான மே 29-ஆம் தேதி நடைபெற்றது. அப்படி ரிசர்வ் டே-வில் போட்டி நடைபெற்றாலும் இந்த ரிசர்வ் டே-விலும் மழை பாதிப்பு இருந்தது. இருந்தாலும் மைதான ஊழியர்களின் சிறப்பான பணி காரணமாக போட்டி ஒருவழியாக நடைபெற்று முடிந்தது.

Rashid Khan Ruturaj

இந்நிலையில் இப்படி ரிசர்வ் டே-வில் போட்டி நடைபெற்று முடிந்த கையோடு அன்றைய இரவே இந்த தொடருக்கான ஒட்டுமொத்த பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. ஆனால் இந்த பரிசளிப்பு விழா தனக்கு முக்கியமில்லை என்றும் தனது தாய் நாட்டுக்கு விளையாடுவது முக்கியம் என போட்டி முடிந்த கையோடு குஜராத் அணியின் முன்னணி வீரரான ரிஷித் கான் இரவோடு இரவாக விமானத்தைப் பிடித்து ஸ்ரீலங்கா சென்றுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த தொடரில் விளையாடவே ரஷீத் கான் இப்படி உடனடியாக இலங்கை சென்றார். அப்படி உடனடியாக அவர் விமானத்தை பிடித்து பறந்திருந்தாலும் கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளை அவர் தவற விட்டுள்ளார்.

இதையும் படிங்க : WTC Final : ஃபைனலுக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் – மொத்தமாக விடை பெறும் தேதி அறிவிப்பு

நிச்சயம் இந்த தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரஷீத் கான் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலககெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக்குகளில் விளையாடிவரும் அவர் எப்போதுமே தேசிய அணி விளையாடும் போட்டிகளை தவறவிடுவதில்லை. அந்தவகையில் இப்படி ஐபிஎல் தொடரின் பரிசளிப்பு விழா கூட முக்கியமில்லை என இரவோடு இரவாக அவர் ஆப்கானிஸ்தான் அணியில் இணைந்துள்ளது கேட்கும் நமக்கே அவர் அந்த அணியின் மீது வைத்திருக்கும் மதிப்பை வெளிக்காட்டுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement