சும்மா அடி பட்டாலே வீட்டுக்கு போற இந்திய வீரர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வீரரா? – ரஷீத் கானை பார்த்து வியந்த ரசிகர்கள்

Rashid-Khan
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக ஹார்டிக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் சிலர் காயம் காரணமாக அணியில் பங்கு பெற முடியாமல் போனது. மேலும் சில வீரர்களுக்கு இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டது.

- Advertisement -

அதோடு இந்த தொடரில் இடம் பெற்றிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் முதல் போட்டிக்கு முன்னதாக உடல்நல பாதிப்புக்கு காரணமாகவே முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. இப்படி இந்திய வீரர்கள் பெரும்பாலானோர் அடிக்கடி காயமடைந்து வருவது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறி வருகிறது.

அதிலும் குறிப்பாக இந்திய வீரர்கள் சிலர் சிறிய காயத்தை சந்தித்தால் கூட அணியில் இருந்தே வெளியேறி ஓய்விற்கு வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் அண்மையில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

- Advertisement -

இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் இடம்பிடித்திருந்த அவர் முதல் போட்டிக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து விலகினார். இருந்தாலும் அவர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தொடர்ந்து அணி வீரர்களுடன் பயணிக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இருக்கும் அந்த பிரச்சனையை தீர்க்க அவரை புறக்கணிக்காதீங்க.. ஹர்பஜன் கருத்து

குறிப்பாக மொஹாலியில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது கூட அவர் பிளேயிங் லெவனில் விளையாடாமல் இருந்தாலும் அணி வீரர்களுடன் இருந்து அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். இப்படி சாதாரண காயம் ஏற்பட்டாலே வீட்டுக்கு திரும்பும் இந்திய வீரர்களுக்கு மத்தியில் முதுகில் ஒரு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அணி வீரர்களுடன் ரஷீத் கான் தொடர்ந்து பயணித்து வருவதை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement