பங்களாதேஷ் வச்சி செய்த ஆப்கான்..! இந்திய அணிக்கு எச்சரிக்கை விடும் ரஷீத் கான்..! ஏன் ,எதற்கு தெரியுமா..?

hassan
- Advertisement -

ஆப்கனிஸ்தான் வீரரான ரஷீத் கான் நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வந்தார் இந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை பெற்ற பந்துவீச்சாளர் என்ற படத்தையும் பெற்றார்.
afghan
ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் நடந்த மேற்கிந்திய அணி மட்டும் உலக 11 அணி விளையாடிய போட்டியில், உலக 11 அணியில் விளையாடிய மிகவும் எதிர்ப்பாக பட்ட ரஷீத் கான் 4 ஒவ்ர்களை வீசி 48 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்களை கைபற்றினர். இதற்கடுத்து தற்போது ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது.

3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி டேராடூனில் நேற்று(ஜூன் 3 ) நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீலடிங்கை தேர்வு செய்தது . இதனால் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால், முஜிபுர் ரஹ்மான் வீசிய முதல் பந்திலேயே வெளியேறி அதிச்சியளித்தார். அதன் பின்னர் லிஸ்டன் தாஸ் 30 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த அணைத்து வீரர்களும் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துகளை சமழிக்க முடியாமல் 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
khan

இந்த போட்டியில் ஐபிஎல் போட்டியின் ஹீரோவான ரஷீத் கான், 3 ஒவர்கள் வீசி வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் 16 வது ஒவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரஷீத் கானிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Advertisement