எனக்கு ஐ.பி.எல்-ல விட இதுதான் முக்கியம். ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறவும் தயார் – ரஷீத் கான் அதிரடி

Rashid
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று துவங்கி இந்தியாவில் உள்ள மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் மே 29ம் தேதி வரை 2 மாதங்கள் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்த பின் இறுதிப் போட்டியுடன் இந்த தொடர் நிறைவுக்கு வருகிறது. வெறும் 2 மாதங்கள் மட்டும் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ipl

- Advertisement -

இதன் காரணமாக சமீப காலங்களாக தங்கள் தாய் நாட்டுக்காக விளையாடுவதை விட பணத்திற்காக ஐபிஎல் தொடரில் விளையாட பல வெளிநாட்டு வீரர்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக தற்போது 24 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் அதன் பின் நடைபெறும் ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார்கள்.

தாய்நாட்டை புறக்கணிக்கும் வெளிநாட்டு வீரர்கள்:
இதற்காக பட் கமின்ஸ், டேவிட் வார்னர் போன்ற முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கனவே அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் அவர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முழு அனுமதி அளித்துள்ளது. அதேபோல வரும் ஏப்ரல் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பல நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் குற்றம் சாட்டியிருந்தார்.

Aus-ipl

மேலும் ஐபிஎல் நடைபெறும் காலகட்டத்தில் நெதர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் கிரிக்கெட் தொடரில் அந்த அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்காமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடிவு எடுத்துள்ளார்கள். வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாது இந்திய அணியிலும் கூட ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு சில வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடி இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவதற்கான முயற்சி செய்யாமல் 15 கோடி ரூபாய்க்கு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

இப்படி பல முக்கிய வீரர்கள் தாய் நாட்டை மறந்துவிட்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்க்கும் பல முன்னாள் வீரர்கள் தங்களது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தாய்நாட்டுக்காக ஐபிஎல் போன்ற தொடர்களை தியாகம் செய்ய தயார் என ஆப்கானிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வீரர் ரஷீத் கான் முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி பிரபல கிரிக்பஸ் இணையதளத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

rashid 2

தாய்நாடு முக்கியம்:
“இது வெறும் வேலை அல்ல. தேசத்துக்காக ஆற்ற வேண்டிய கடமை. நாட்டுக்காக சிறப்பாக செயல்படுகிறமோ இல்லையோ அது வேறு கதை. ஆனால் தேசத்துக்காக விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தால் முதலில் நான் நாட்டுக்காக விளையாட தான் செல்வேன். எனது தேசம் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது என்றால் நான் அங்கு முதல் ஆளாக இருக்க வேண்டும். அதில் நான் சிறப்பாக செயல்பட்டாலும் செயல்படாவிட்டாலும் நான் நாட்டுக்காக விளையாடுகிறேன் என்பது தெரிந்தால் பல இளைஞர்கள் தாய்நாட்டை விட பெரியது எதுவுமில்லை என உணர்வார்கள். எது நடந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு நாட்டுக்காக கடமையாற்ற வேண்டும்” என கூறினார்.

- Advertisement -

ஐபிஎல் தவிர பிக் பேஷ், பிஎஸ்எல் என உலகில் நடைபெறும் அனைத்து டி20 தொடர்களிலும் ஒன்றுவிடாமல் பங்கேற்கும் ரசித் கான் இன்றைய தேதியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் நாட்டுக்காக விளையாடுவதை பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “எனது நாடு ஆப்கானிஸ்தானுக்காக விளையாடிய பின்புதான் நான் இந்த நிலையை அடைந்துள்ளேன். ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி இல்லையென்றால் நான் இன்று எங்கே இருப்பேன் என எனக்கே தெரியாது. எனக்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கிடைத்ததற்கு ஆப்கானிஸ்தான் மட்டுமே காரணம். எனவே அதை மதித்து நான் எங்கே இருந்தாலும் ஆப்கானிஸ்தானுக்காக விளையாட வேண்டிய நிலை வந்தால் உடனே சென்று விடுவேன்”

Rashid

“எனது தாய்நாட்டுக்காக விளையாடி உலகக்கோப்பையை வெல்வதே எனது மிகப்பெரிய கனவாகும். இதே கனவுதான் மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் இருக்கும் என்பதால் விரைவில் அவர்கள் தாய்நாட்டுக்காக விளையாட விரும்புவதை பார்ப்பேன் என நம்புகிறேன்” என கூறினார். இப்படி கூறும் ரஷித் கான் வெறும் வாய் வார்த்தையோடு நிற்காமல் நிஜத்தில் செய்தும் காட்டியுள்ளார்.

- Advertisement -

செய்து காட்டிய ரசித் கான்:
ஆம் சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த பிஎஸ்எல் தொடரில் லாகூர் அணிக்காக பைனலில் விளையாட வேண்டிய சமயத்தில் நாட்டுக்காக விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவர் தொடர்ந்து பிஎஸ்எல் தொடரில் விளையாடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தாய்நாடு தான் முக்கியம் என முடிவெடுத்த அவர் அந்தத் தொடரை பாதியிலேயே விட்டுவிட்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடினார்.

இதையும் படிங்க : தனது ஆல்-டைம் சாதனையை தகர்த்த அஷ்வின் பற்றி கபில் தேவ் கூறியது – என்ன தெரியுமா?

மொத்தத்தில் தாய்நாட்டுக்காக ஐபிஎல் தொடர் போன்ற டி20 தொடர்களை தியாகம் செய்யத் தயார் என ரஷித் கான் கூறியது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Advertisement