தனது ஆல்-டைம் சாதனையை தகர்த்த அஷ்வின் பற்றி கபில் தேவ் கூறியது – என்ன தெரியுமா?

kapil dev
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து இலங்கை பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியது.

ashwin 1

- Advertisement -

குறிப்பாக அந்த அணியின் பந்து வீச்சாளர்களை முதல் நாளில் அதிரடியாக எதிர்கொண்ட ரிஷப் பண்ட் 97 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். அவருடன் மறுபுறம் தொடர்ந்து மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175* ரன்கள் விளாசினார். இவருடன் அஸ்வின் தன் பங்கிற்கு 61 ரன்கள் எடுக்க 574/8 ரன்களை எடுத்திருந்த இந்தியா தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இந்தியா மிகப்பெரிய வெற்றி:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை வீரர்கள் இந்தியாவின் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் தங்களின் விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் சுழலில் சிக்கிய அந்த அணி 174 ரன்களுக்கு சுருண்டு பாலோ-ஆன் அடைந்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக நிஷங்கா 61* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்து வீச்சிலும் பட்டைய கிளப்பிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ashwin 1

இதை அடுத்து 400 ரன்கள் பின்தங்கிய நிலையில் தோல்வியை தவிர்க்க போராடிய இலங்கை அணி மீண்டும் இந்தியாவின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 5வது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

- Advertisement -

கபில் தேவை முந்திய அஷ்வின்:
இப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய பந்து வீச்சாளர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடித்த அவர் புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள் எடுத்த ஜாம்பவான் கபில்தேவ் இதுநாள் வரை அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். தற்போது 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை முந்தியுள்ளார்.

kapil dev

இந்தியா கண்ட மகத்தான வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில்தேவ் தனது ஆல்டைம் சாதனையை அஸ்வின் முறியடித்தது பற்றி மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீப கலங்கலாக முழு வாய்ப்பை பெறாத அவருக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். அவருக்கு கிடைக்காத வாய்ப்புகளிலும் அவர் விளையாடியிருந்தால் இந்த 434 விக்கெட்டுகளை அவர் எப்போதோ கடந்திருப்பார். அவரின் இந்த சாதனைக்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அந்த 2வது இடத்தை எதற்காக நான் இன்னும் பிடித்துக் கொள்ள வேண்டும்? என்னுடைய காலங்கள் முடிந்து போய் விட்டன” என பாராட்டினார்.

- Advertisement -

சமீப காலங்களாக இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினுக்கு பெரும்பாலும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. அந்த மறுக்கப்பட்ட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் தனது சாதனையை இதற்கு முன்பாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் உடைத்திருப்பார் என கபில்தேவ் பாராட்டினார். மேலும் தமது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்த இத்தனை நாட்கள் கழித்து அந்த சாதனையை அடுத்த தலைமுறை வீரர் உடைத்தது மிகுந்த மகிழ்ச்சி என அவர் பெருமையுடன் கூறினார்.

kapil dev 1

500 விக்கெட் எடுங்க:
“அஷ்வின் நன்கு யோசிக்க கூடிய திறமையான கிரிக்கெட் வீரர். எனவே அவர் தனது அடுத்த இலக்காக 500 விக்கெட்டுகளை நிர்ணயித்து கொண்டு அதை எட்ட முயற்சி செய்து சாதனை படைப்பார் என நம்புகிறேன். சொல்லப்போனால் அவர் அதற்கு மேலும் எடுக்க வேண்டும்” என இது பற்றி மேலும் தெரிவித்த கபில்தேவ் டெஸ்ட் போட்டிகளில் தற்போது உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளராக வலம் வரும் அஸ்வின் 500 விக்கெட்டுக்கு மேல் எடுக்க வேண்டும் என தனது ஆசையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சொக்கத்தங்க மனசு! தனது 100வது டெஸ்டில் விராட் கோலி செய்த மனதை தொட்ட காரியம் – வீடியோ உள்ளே

தற்போது 35 வயதை கடந்துள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நுழைந்து 9வது இடத்தில் ஜொலிக்கிறார். எப்படியும் குறைந்தது இன்னும் 3 வருடங்கள் அவர் விளையாடுவார் என்பதால் நிச்சயம் 500 விக்கெட்டுகளை தொடுவார் என நம்பலாம். மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ள அனில் கும்ப்ளேவின் சாதனையையும் (619 விக்கெட்கள்) அவர் தொடுவாரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

Advertisement