இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலிருந்து விலகிய – நட்சத்திர வீரர்

IND-vs-AFG
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி நாளை துவங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை வெளியானதில் இருந்தே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தைக் தொட்டுள்ளது.

ஏனெனில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச டி20 தொடர் இது என்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பிருப்பதாலும் இந்த தொடர் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான இரண்டு அணிகளும் அறிவிக்கப்பட்டு தற்போது இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வேளையில் இந்த டி20 தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீப காலமாகவே எவ்வித போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வந்த ரஷீத் கான் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த காயத்திற்கான அறுவை சிகிச்சையை இவர் மேற்கொண்டு தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து முன்னேறி வந்தாலும் மீண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடி பெரிய காயத்தை சந்திக்க வேண்டாம் என்று முன்னெச்சரிக்கையாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வெ.இ தொடரில் கேப்டனாக ஸ்மித்.. டேவிட் வார்னருக்கு பதிலாக புதிய ஓப்பனிங் வீரரை அறிவித்த ஆஸ்திரேலியா

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டியானது ஜனவரி 11-ஆம் தேதி (நாளை) மொஹாலி நகரில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement