வெ.இ தொடரில் கேப்டனாக ஸ்மித்.. டேவிட் வார்னருக்கு பதிலாக புதிய ஓப்பனிங் வீரரை அறிவித்த ஆஸ்திரேலியா

Warner And Smith
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. அந்தத் தொடருடன் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த 10 வருடங்களாக துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் நிறைய வெற்றிகளில் பங்கேற்றிய அவருக்கு ரசிகர்களும் வீரர்களும் பிரியமானதுடன் விடை கொடுத்தனர்.

கடந்த 2015, 2023 ஆகிய 2 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் வெல்வதற்கு உதவினார். எனவே அவருடைய இடத்தை அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியில் நிரப்பப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு மாட் ரென்ஷா, கேமரூன் கிரீன் ஆகிய 2 இளம் வீரர்களிடம் போட்டியும் இருந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி:
அவர்களுக்கிடையே தாமும் துவக்க வீரராக களமிறங்க விரும்புவதாக நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருந்தார். அதற்கு ஒருவேளை ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக விளையாடினால் ஜாம்பவான் பிரைன் லாராவின் 400 ரன்கள் சாதனையை அசால்தாக உடைத்து விடுவார் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. அந்த 2 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியை அறிவித்த தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இதுவரை டேவிட் வார்னர் விளையாடிய ஓப்பனிங் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவார் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஆரம்பகாலங்களில் 9வது இடத்தில் விளையாடிய ஸ்மித் படிப்படியாக முன்னேறி 4வது இடத்தில் விளையாடி நிறைய ரன்கள் குவித்து வந்தார். தற்போது கேரியரில் முதல் முறையாக துவக்க வீரராக அவர் களமிறங்குவதால் கேமரூன் கிரீன் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்றும் ஆஸ்திரலியா வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: உங்களோட இடத்தை அவர் பிடிச்சுட்டாரு.. அதான் சான்ஸ் கிடைக்கல.. சாஹலுக்கு இம்ரான் தாஹிர் அட்வைஸ்

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்ஷேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், மாத்தியூ ரென்ஷா, ஸ்டீவ்ஸ்மித், மிட்செல் ஸ்டார்க். ஒருநாள் அணி:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், கேமெரூன் க்ரீன், ஆரோன் ஹர்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மானஸ் லபுஸ்ஷேன், க்ளென் மேக்ஸ்வெல், லன்ஸ் மோரிஸ், ஜெய் ரிச்சர்ட்சன், மாட் ஷார்ட், ஆடம் சாம்பா

Advertisement