5 மாதத்தில் ரஷீத் கான் கேப்டன் பதவி நீக்கம். அதிரடி காட்டிய கிரிக்கெட் வாரியம் – காரணம் இதுதானாம்

- Advertisement -

உலகக்கோப்பை தொடரில் பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது படுதோல்வி அடைந்து ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் இந்த மோசமான ஆட்டத்திற்ற்காக அந்த அணியின் கேப்டன் செஷாத் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டார்.

Rashid

- Advertisement -

இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் வயது குறைந்தவராக இருந்தாலும் சர்வதேச அளவில் அதிக அனுபவம் பெற்ற காரணத்தால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக அணி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து கூறப்பட்டது. ஆனால் தற்போதைய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அடைந்த தோல்விகள் காரணமாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனைத்து வடிவத்திற்கும் அஸ்கர் ஆப்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஷீத் கான் தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெஸ்ட் தொடரையும் ஆப்கானிஸ்தான் அணி தோற்றது. இதையடுத்து வெற்றிகரமான கேப்டன் என்று கருதப்படும் அஸ்கர் ஆப்கான்-யிடம் மீண்டும் கேப்டன்சி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரஷீத் கான் கேப்டனாக தொடரவில்லை என்றாலும் துணை கேப்டன் பதவியை தொடர்வார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2020 டி20 உலகக் கோப்பை வரை அவர் துணை கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. ஜூலை மாதம் பதவியேற்ற ரஷீத் கான் வெறும் 5 மாதங்களே முடிவடைந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அணிவீரர்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Afg

ஆப்கானிஸ்தான் அணியில் இந்த திடீர் முடிவு அதிரடி மாற்றமாகக் கருதப்படுகிறது. உலகக் கோப்பைக்கு முன்னர் அஸ்கர் ஆப்கானிடம் தான் கேப்டன் பதவி இருந்தது. ஆனால் உலக கோப்பை தொடருக்கு முன் தேவையில்லாமல் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு செஷாத்திடம் கொடுத்தனர் அப்போது அந்த விடயம் பெரிய சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement