இந்திய வீரரான இவருக்கு எதிராக பந்துவீசுவது மட்டுமே ரொம்ப கஷ்டம் – மனம்திறந்த ரஷீத் கான்

rashidspin
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ரஷீத் கான் 16 வயதிலேயே ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது 21 வயதே ஆன இவர் ஏகப்பட்ட விக்கெட்டுகளையும், சாதனைகளை படைத்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டியிலும் சன் ரைசர்ஸ் அணிக்காக முக்கிய நட்சத்திர பந்துவீச்சாளக திகழ்கிறார்.

rashid

- Advertisement -

தனது சிறப்பான ஸ்பின் பவுலிங் மூலம் உலகின் முன்னணி வீரர்கள் பலரை அச்சுறுத்தி வரும் ரஷீத் கான் தற்போது ஐபிஎல் இல் தான் பந்துவீச பயப்படும் 3 வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்து 2015 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமான ரஷீத் கான் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அந்த அணியின் நட்சத்திர வீரராக ஜொலிக்கிறார் .மேலும் ஐபிஎல் தொடரிலும் சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார்.

இவர் ஸ்பின் பவுலிங்கில் மட்டுமல்லாமல் தற்போது பேட்டிங்கிலும் இறுதி கட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக தற்போது உலக அளவில் அவரது ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரஷீத் கான் இதுவரை ஐபிஎல் தொடரில் 46 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

rashid khan

உலகின் பல்வேறு முன்னணி வீரர்களுக்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் தான் பந்துவீச பயப்படும் 3 வீரர்கள் பற்றி தற்போது பேசியுள்ளார். இந்திய அணியில் தோனி, ரோகித் சர்மா, கோலி ஆகியோரைக் கொண்ட எல்லாம் நான் பயந்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருவருக்கு பந்துவீச பயந்தது என்றால் அது மும்பை அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மட்டுமே என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை தவிர சர்வதேச வீரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரசல் ஆகியோருக்கு பந்துவீசுவது மிகவும் கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Pandya

21 வயதான ரஷீத் கான் இதுவரை 71 ஒருநாள் போட்டியில் விளையாடி 133 விக்கெட்டுகளையும், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளையும், 48 டி20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அது தவிர ஐபிஎல் போட்டிகளில் 46 போட்டியில் பங்கேற்று 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement