24 வயசுலேயே இப்படி ஒரு இமாலய சாதனையா? கிரிக்கெட் உலகை மிரளவைத்த ரஷீத் கான் – விவரம் இதோ

Rashid-Khan
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி ஆப்கானிஸ்தான் அணிக்காக இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகள், 86 ஒருநாள் போட்டிகள் மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 24 வயதாகும் ரஷித் கான் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது கிட்டத்தட்ட 300 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

rashid

- Advertisement -

அதுமட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் ரஷித் கான் முன்னணி வீரராக உச்ச மதிப்புடன் பார்க்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பி.பி.எல், வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் கரீபியன் லீக் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்,

அதனைத்தொடர்ந்து அவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் இந்த ஆண்டு அறிமுகமாகிய டி20 லீக் கிரிக்கெட்டில் எம்.ஐ கேப்டவுன் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த தொடரில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய எம்.ஐ கேப்டவுன் அணி குறிப்பிட்ட அந்த போட்டியில் தோல்வியை தழுவியது.

Rashid Khan 1

இருந்தாலும் இந்த போட்டியில் ரஷித் கான் நான்கு ஓவர்கள் பந்துவீசி 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளோடு சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அவர் இமாலய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அந்த சாதனை யாதெனில் : இதுவரை டி20 கிரிக்கெட்டில் மட்டும் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையை ரசித் கான் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஒரு பவுலராக பிராவோ மட்டும் தான் இருந்தார். பிராவோ 556 டி20 போட்டிகளில் பங்கேற்று 614 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : என்னோட எல்லா வளர்ச்சிக்கும் அவர் தான் காரணம் – வைரலாகும் முகமது சிராஜ் பேசிய பழைய வீடியோ

ஆனால் தற்போது ரஷித் கான் 371 போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளார். 24 வயதிலேயே 500 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் கிட்டத்தட்ட ரிட்டயர் ஆகும்போது டி20 கிரிக்கெட்டில் 2000 விக்கெட்டை கூட வீழ்த்த வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் உலகையே இவர் மிரள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement