குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு விருதை அர்ப்பணித்த ஐதராபாத் வீரர்..! – யார் தெரியுமா..?

srh
- Advertisement -

நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான். நேற்று நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியத்துடன் பெட்டிங்கிலும் அசத்தி ஆட்டநாயன் விருதையும் பெற்றார். தனது இந்த வெற்றியை ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அர்பணிப்பதாக உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
rashid

நேற்று(மே 25 ) இரவு கொல்கத்தா ஹெடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யாரும் 35 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரசித்த கான் முதல் பாதியில் பேட்டிங்கில் 10 பந்துகளில் 34 ரன்களை அடித்து அனைவரையும் உறைய வைத்தார். பின்னர் பந்துவீச்சில் கொல்கத்தா அணியின் முக்கிய ஆட்டக்காரரான கிறிஸ் லயனிடம் இருந்து தனது விக்கெட் வேட்டையை தொடங்கி ரஷித் 4 ஒவர்களை வீசி 3 விக்கட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
rashid

இதுகுறித்து பேசிய அவர் “என்னுடைய திறமையை நம்பி நான் என்னுடைய 100 சதவீத முயற்சியையும் அளித்து விளையாடினேன். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது மகழ்ச்சி அளிக்கிறது. நான் இந்த விருதை சில நாட்களுக்கு முன்னர் எனது தாய் நாட்டின்(ஆப்கானிஸ்தான்) கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

Advertisement