எப்படியாவது செமி பைனல் போலாம்னு நெனச்ச ஆஸ்திரேலியாவின் வாயில் மண்ணை தூவிய – ஆப்கானிஸ்தான் (நடந்தது என்ன?)

Rashid Khan David Warner AUs vs AFG
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நவம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 38வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பு இழந்த ஆப்கானிஸ்தானை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா எதிர்கொண்டது. புகழ்பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பின்ச் காயமடைந்ததால் மேத்தியூ வேட் தலைமை தாங்கிய நிலையில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே கேமரூன் கிரீன் 3 (2) ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக 5 பவுண்டரியுடன் 25 (18) ரன்கள் குவித்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அப்போது வந்த ஸ்டீவ் ஸ்மித் 4 (4) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் மற்றொருபுறம் அதிரடி காட்டிய மிட்சேல் மார்ஷ் 3 பவுண்டர் 2 சிக்ஸருடன் 45 (30) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஆனாலும் தடுமாறிய அந்த அணியை கிளன் மேக்ஸ்வெல் உடன் இணைந்து காப்பாற்ற முயற்சித்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 2 சிக்ருடன் 25 (21) ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டானார்.

- Advertisement -

மிரட்டிய ஆப்கானிஸ்தான்:
கடைசியில் மேத்தியூ வேட் 6 (8) பட் கமின்ஸ் 0 (2) போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் போராடிய கிளன் மேக்ஸ்வெல் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 54* (32) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 168/8 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு உஸ்மான் காணி 2 (7) ரன்களில் அவுட்டானாலும் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30 (17) ரன்களை அதிரடியாக விளாசி ஆட்டமிழந்தார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய குல்ஃபதின் நைப் அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 (23) ரன்களை எடுத்து மிரட்டிய போது கிளன் மேக்ஸ்வெல் ரன் அவுட் செய்தார். அந்த தருணம் திருப்பு முனையை ஏற்படுத்தியது போல் மறுபுறம் நங்கூரமாக நின்ற இப்ராஹிம் ஜாட்ரான் 26 (33) முகமது நபி 1 (2) நஜிபுல்லா ஜாட்ரான் 0 (2) என முக்கிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தனர். அதனால் 103/6 என ஆப்கானிஸ்தான் தடுமாறியதால் ஆஸ்திரேலியா குறைந்தது 60 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அப்போது உள்ளே புகுந்த ரஷித் கான் யாருமே எதிர்பாராத வகையில் 3 பவுண்டரி 4 சிக்ஸரை பறக்கவிட்டு 48* (23) ரன்களை விளாசி வெற்றிக்கு போராடிய போதிலும் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 164/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றும் துளியும் பயன் கிடைக்காமல் போனது. ஏனெனில் மோசமாக இருக்கும் ரன்ரேட்டை உயர்த்தி அரையிறுதி செல்ல இப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய வெற்றி தேவைப்பட்டது.

ஆனால் கடைசியில் ரஷீத் கான் குட்டையை குழப்பியதால் 4 ரன்கள் மட்டுமே வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு அந்த வாய்ப்பு மொத்தமாக பறிபோய் விட்டது. இதனால் குரூப் 1 புள்ளி பட்டியலில் 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்று 2வது இடத்தில் இருக்கும் அந்த அணி நாளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவை விட அதிக ரன் ரேட் கொண்டுள்ள இங்கிலாந்து இலங்கையை தோற்கடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் ஆஸ்திரேலியாவின்  கனவு பறிபோய் விட்டதாகவே பார்க்கப்படுகிறது. அதனால் நாளைய போட்டியில் இலங்கை வெல்ல வேண்டும் அல்லது மழை வந்து தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

இதையும் படிங்க : CSK : 2023 சீசனில் ஜடேஜா எந்த அணிக்காக விளையாடுவார்? தோனியே நேரடியாக தலையீடு – பரபரப்பு தகவல்

ஏனெனில் மழை வந்து தடுத்தால் 5 புள்ளிகள் பெற்றுள்ள இங்கிலாந்து 6 புள்ளிகளை மட்டுமே பெறும் என்பதால் ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆனால் அப்போட்டி நடைபெறும் சிட்னி நகரில் நாளை மழைக்கான வாய்ப்பு 2% உள்ளதால் ஆஸ்திரேலியாவின் உலக கோப்பையை தக்க வைக்கும் கனவு தகர்த்து விட்டது என்றே வெளிப்படையாக சொல்லலாம்.

Advertisement