கடந்த வெள்ளிக்கிழமை (மே 25) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அபராமபாக விளையாடி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானிற்கு பாராட்டுக்கள் குவித்த வண்ணம் இருந்தது.இந்நிலையில் தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து கூறியுள்ளார் ரஷீத் கான்.
ஆப்கனிஸ்தான் வீரரான ரஷீத் கான் நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் .இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அணைத்து பந்து வீச்சாளர்களை விடஓவருக்கு 6.88 ரன்களை கொடுத்து குறைந்த பந்துவீச்சு சராசரியை பெற்றுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமக திகழ்ந்து வருகிறார் ரசீத் கான். அதிலும் குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தின் போது சிறப்பாக விளையாடிய ரஷீத் கான் முதலில் பேட்டிங்கில் தனது திறமையை காட்டினார், 10 பந்துகளில் 34 ரன்களை குவித்து ஹைதராபாத் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். மேலும் அந்த போட்டியில் 3 முக்கிய விக்கெடுகளையும் வீழ்த்தி ஆட்டநாகன் விருதையும் பெற்றார்.
இவரது திறமையை அனைவருமே பாராட்டி வந்த நிலையில் தனது வெற்றி குறித்த ரகசியத்தை தெரிவித்துள்ளார்” என்னுடைய திறமையை நம்பி நான் 100 சதவீத முயற்சியையும் அளித்து விளையாடினேன். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியது மகழ்ச்சி அளிக்கிறது. ஒரு பேட்ஸ்மேனாக தான் என்னோடய பயணத்தை ஆரம்பித்தேன் அதனால் என்னால் பேட்டிங் ஆட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.