38 ரன்ஸ்.. 3 விக்கெட்ஸ்.. சௌத்தீயை முந்திய ரசித் கான் உலக சாதனை.. அமீரகத்தை சாய்த்த ஆப்கானிஸ்தான்

Rashid Khan
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அதற்கு முன்பாக அங்கு ஐக்கிய அரபு நாடுகள், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தது.

அதையடுத்து ஆப்கானிஸ்தான் தங்களுடைய 2வது போட்டியில் ஐக்கிய அரபு நாடுகளை எதிர்கொண்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி சார்ஜாவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 188/4 ரன்கள் எடுத்து அசத்தியது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அசத்தல்:

அந்த அணிக்கு அதிகபட்சமாக செதிகுல்லா அட்டல் 54 (40), இப்ராஹிம் ஜாட்ரான் 63 (40), ஓமர்சாய் 20* (12), கரீம் ஜானத் 23* (10) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அமீரக அணிக்கு அதிகபட்சமாக ரோகித் கான், சாகீர் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய அமீரக அணிக்கு கேப்டன் முகமது வாசிம் அதிரடியாக பேட்டிங் செய்து 67 (37) ரன்கள் குவித்து அசத்தினார்.

அதே போல மிடில் ஆர்டரில் ராகுல் சோப்ரா அரை சதத்தை அடித்து 52* (35) ரன்கள் அடித்து வெற்றிக்குப் போராடினார். ஆனால் முகமது சோகைப் 7, ஈதன் டிஸோசா 12, ஆசிப் கான் 1, ஹர்ஷித் கௌஷிக் 4 என மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார்கள். அதனால் 20 ஓவரில் 150/8 ரன்களை மட்டுமே எடுத்த ஐக்கிய அரபு நாடுகள் அணி சொந்த மண்ணில் தோற்றது.

- Advertisement -

ரசித் கான் உலக சாதனை:

மறுபுறம் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் இத்தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரசித் கான், சரபுதின் அஷ்ரப் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்தப் போட்டியையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரசித் கான் 165 * விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 8 பந்தில் 7 சிக்ஸ்.. 38 வயதிலும் மாறாத காட்டடி.. ஹேல்ஸை முந்தி 2வது சாதனை.. கரீபியனில் தெறிக்க விட்ட பொல்லார்ட்

அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற டிம் சௌதீயின் சாதனையை உடைத்துள்ள ரசித் கான் புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரசித் கான்: 165 (ஆப்கானிஸ்தான், 98 போட்டிகள்)
2. டிம் சௌதீ: 164 (நியூஸிலாந்து, 126 போட்டிகள்)
3. இஸ் சோதி: 150 (நியூஸிலாந்து, 126 போட்டிகள்)

Advertisement