ரஞ்சி கோப்பைக்கான தேதிகள் வெளியீடு – இது தான் கடைசி சான்ஸ் ! 2 சீனியர் வீரர்களை எச்சரித்த கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை இந்த வருடம் 2 பாகங்களாக நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த 2020-21 ரஞ்சி கோப்பை சீசன் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் 2021-22 சீசன் கடந்த ஜனவரி மாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால் அதே பிரச்சனையால் இந்த தொடர் மீண்டும் காலவரையின்றி தள்ளிவைக்க பட்டது.

- Advertisement -

இதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் பல ஆயிரம் கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதுடன் அவர்களின் அன்றாட வாழ்க்கையும் மோசமாக மாறும் நிலை ஏற்பட்டது. ஆனால் அதே போன்தொரு நிலைமையில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை வருமானமாக ஈட்டி தரும் ஐபிஎல் தொடரை மட்டும் எத்தனை தடைகள் வந்தாலும் அவை அனைத்தையும் உடைத்து வெற்றிகரமாக நடத்தி வரும் பிசிசிஐ கல்லா கட்டி வருகிறது.

ரஞ்சி கோப்பை அட்டவணை:
இதனால் கடுப்பான பல முன்னாள் வீரர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பிசிசிஐயை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்கள். குறிப்பாக “இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக இருக்கும் ரஞ்சிக் கோப்பையை ஒதுக்க நினைத்தால் அது இந்திய கிரிக்கெட்டை பாழாக்கிவிடும்” என இந்தியாவின் ஜாம்பவான் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

IPL-bcci

இந்த அடுத்தடுத்த கேள்விக்கணைகளை தாங்க முடியாத பிசிசிஐ ஒருவழியாக இந்த வருடத்துக்கான ரஞ்சிக் கோப்பையை 2 பாகங்களாக நடத்த உள்ளதாக அறிவித்தது. அதன்படி இந்த வருடத்துக்கான ரஞ்சி கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி துவங்கி வரும் மார்ச் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இருப்பினும் இந்த கோப்பையின் நாக்அவுட் சுற்று போட்டிகள் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் வரும் மே 30ஆம் தேதியில் துவங்கி ஜூன் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

- Advertisement -

மைதாங்கள்:
இருப்பினும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த முறை ஒவ்வொரு அணியும் வெறும் 3 லீக் போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 62 நாட்கள் நடைபெறும் ரஞ்சி கோப்பையில் 64 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதலில் 57 லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, ராஜ்கோட், கட்டாக், அகமதாபாத், திருவனந்தபுரம், டெல்லி, ஹரியானா ஆகிய நகரங்களில் எலைட் குரூப் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. கொல்கத்தாவில் பிளேட் குரூப் போட்டிகள் நடைபெற உள்ளது.

ganguly-bcci 2

இந்த கோப்பைக்கான லீக் சுற்றில் பங்கேற்கும் அணிகளில் எலைட் குரூப் பிரிவில் தலா 4 அணிகள் அடங்கிய 8 அணிகள் பிரிக்கப்பட உள்ளன. எஞ்சி இருக்கும் 6 அணிகள் பிளேட் குரூப் பிரிவில் விளையாட உள்ளது. மொத்தத்தில் ரஞ்சி கோப்பை மீண்டும் நடைபெற உள்ளதால் பல உள்ளூர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

- Advertisement -

கடைசி சான்ஸ்:
பொதுவாகவே இந்திய அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர்கள் மோசமான பார்ம் காரணமாக ரன்கள் குவித்து தடுமாறும் போது இந்த ரஞ்சி கோப்பையில் மீண்டும் விளையாடி தங்களது பார்மை மீட்டு எடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் இந்திய அணியில் தற்போது படுமோசமான பார்மில் இருக்கும் அனுபவ வீரர்கள் அஜிங்கிய ரஹானே மற்றும் புஜாரா ஆகியோர் இந்த ரஞ்சி கோப்பையில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

pujara 1

இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரஹானே மற்றும் புஜாராவுகு வாய்ப்பு கிடைக்கும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : பாகுபலி அளவில் சூப்பர் ஹீரோவாக தல தோனி எடுத்த புதிய அவதாரம்! ட்ரைலர் – முழு விவரம் இதோ

இதுபற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “அவர் மிகச் சிறந்த வீரர்கள். அவர்கள் இந்த ரஞ்சி கோப்பையில் விளையாடி அதிகப்படியான ரன்களை குவிப்பார்கள் என நம்புகிறேன். ரஞ்சி கோப்பையில் விளையாடிய பின் இந்தியாவுக்காக அவர்கள் விளையாடுவதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. ரஞ்சி கோப்பை என்பது ஒரு மிகப்பெரிய தொடராகும். ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் அவர்களுக்கு இந்த தொடர் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement