பாகுபலி அளவில் சூப்பர் ஹீரோவாக தல தோனி எடுத்த புதிய அவதாரம்! ட்ரைலர் – முழு விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக 3 வகையான ஐசிசி உலககோப்பைகளையும் கேப்டனாக வென்றுள்ள அவர் இந்தியா தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து வென்று கொடுத்துள்ளார்.

Dhoni

- Advertisement -

இதனால் கேப்டன் கூல் மற்றும் பினிசெர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்வதிலும் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இதனால் விராட் கோலி உள்ளிட்ட தற்போதைய இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் மற்றும் ஷாருக்கான் போன்ற வருங்கால இந்திய வீரர்களின் ரோல் மாடலாக திகழும் அவர் கிரிக்கெட்டையும் தாண்டி இந்தியாவில் உள்ள பலரின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

புதிய அவதாரம் :
கூலான கேப்டன், அதிரடியான பினிசெர், மின்னல் வேக விக்கெட் கீப்பர், இளைஞர்களின் ரோல்மாடல் உள்ளிட்ட பல பரிணாமங்களைக் கொண்டுள்ள எம்எஸ் தோனி தற்போது திரைத்துறையில் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஆம் “அதர்வா : தி ஓர்ஜின்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நாவல் கிராபிக் காமிக் படத்தில் தோனி இடம் பெற்றுள்ளார். இந்தப் படமானது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் வகித்த “கோச்சடையான்” திரைப்படம் போன்ற ஒரு காமிக் படமாகும். ஒரு நாவல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த காமிக் படமானது தோனியை ஒரு முக்கிய கதாபாத்திரமாக மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MS Dhoni Adharva

இதற்கான மோஷன் வீடியோவை தோனி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். ஏற்கனவே பல விளம்பரங்களில் நடித்துள்ள தோனி இதுபோன்ற ஒரு பரிணாமத்தில் தோன்றுவது இதுவே முதல் முறை என்பதால் பல திரைத்துறையினர் இந்த முழு படத்தை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிப்பதாக ட்ரைலரை பார்த்தபின் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

நீண்ட முடி சூப்பர் ஹீரோ:
கிரிக்கெட் காலடி வைத்தபோது மிக நீண்ட முடியுடன் கூடிய எம்எஸ் தோனி எதிர் அணி பவுலர்களை பந்தாடி சிக்ஸர்களை பறக்கவிட்டு புகழ் பெற்றவர். அவரின் அந்த ஹேர்ஸ் டைலுக்காகவே பலர் அவரின் ரசிகர்களாக மாறினார்கள். குறிப்பாக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் அவரின் அந்த ஹேர் ஸ்டைலை ஒருமுறை வெளிப்படையாகவே பாராட்டி இருந்தார். அதேபோல நீளமான முடிகளுடன் கூடிய தோற்றத்தில் இந்த காமிக் படத்தில் எம் எஸ் தோனி தோன்றியுள்ளார். அதர்வா – தி ஓர்ஜின் காமிக் படத்தின் மோஷன் ட்ரைலர் வீடியோ இதோ:

dhoni 1

இதில் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் இந்த படத்தை உருவாக்கி உள்ளவர்கள் முழுக்க முழுக்க தமிழர்கள் என்பது தமிழக தோனி ரசிகர்களுக்கு பெருமையான விசயமாகும். ஆம் இந்தப் படத்தின் நாவல் கதையை கதாசிரியர் தமிழ்மணி எழுத அதை வேல் மோகன் தலைமை ஏற்று இயக்கவுள்ளார். வின்சென்ட் அடைக்கல் ராஜ் மற்றும் அசோக் மனோகர் ஆகியோர் இந்த படத்தின் தயாரிப்பாளர்களாக இருக்க இதை “விர்சு ஸ்டூடியோ” வெளியிடுகிறது.

பாகுபலி தோனி:
இந்த புதிய பரிணாமம் பற்றி எம்எஸ் தோனி கூறியது பின்வருமாறு. “இந்த திட்டத்துடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது உண்மையில் ஒரு அற்புதமான முயற்சியாகும்.
அதர்வா – தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதை மற்றும் அதிவேகமான கலைப்படைப்புகளுடன் வசீகரிக்கும் கிராஃபிக் நாவலாகும். இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத்துடன் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி ஒவ்வொரு வாசகரையும் இன்னும் அதிகமாக விரும்ப வைக்கும்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சில ரசிகர்கள் “தோனி பாகுபலியை போல் காட்சி அளிக்கிறார்” என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே எம் எஸ் தோனியின் மையப்படுத்தி வாழ்க்கை வரலாற்றை வெளியான “எம்எஸ் தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் இந்த படமும் மெகா ஹிட் அடிக்கும் என உறுதியாக நம்பலாம். இந்தியாவுக்காக கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய தோனி ஐபிஎல் 2022 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement