என்ன இருந்தாலும் இந்தியாவிடம் அந்த விஷயத்தை பாகிஸ்தான் கத்துக்கணும் – முதல் முறையாக ரமீஸ் ராஜா நியாயமான பேச்சு

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் அபாரமாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. ஜனவரி 21ஆம் தேதியன்று ராய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் அனலான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாது நியூசிலாந்து முதல் ஓவரிலிருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது.

IND-vs-NZ

- Advertisement -

ஃபின் ஆலன் 0, டேவோன் கான்வே 7, ஹென்றி நிக்கோலஸ் 2, கேப்டன் டாம் லாதம் 1 என முக்கிய வீரர்கள் ஒற்றை ரன்களில் அவுட்டானதால் 15/5 என ஆரம்பத்திலேயே சரிந்த நியூசிலாந்து 100 ரன்களைத் தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது கிளன் பிலிப்ஸ் 36, மைக்கெல் பிரேஸ்வெல் 22, மிட்சேல் சாட்னர் 27 என லோயர் மிடில் ஆர்டரில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு கணிசமான ரன்களை குவித்து மானத்தை காப்பாற்றினர். அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

நியாயமான பேச்சு:
அதை தொடர்ந்து 109 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 51 (50) ரன்களும் சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 40* (53) ரன்களும் எடுத்து 20.1 ஓவரிலேயே எளிதான வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 2 – 0* (3) கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது. முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து விட்டு உலகின் நம்பர் ஒன் அணியாக இத்தொடரில் களமிறங்கிய நியூஸிலாந்து இந்தியாவிடம் சந்தித்த அடுத்தடுத்த தோல்விகளால் முதலிடத்தை இழந்து 2வது இடத்திற்கு சரிந்துள்ளது.

அப்படி எதிரணி யாராக இருந்தாலும் சொந்த மண்ணில் தாங்கள் தான் கில்லி என்பதை நிரூபிக்கும் இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ரமீஸ் ராஜா வெளிப்படையாக பாராட்டியுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்விகளை பாகிஸ்தான் சந்தித்ததால் அந்நாட்டு வாரிய தலைவர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவர் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக சர்ச்சையாக பேசி வந்தார். அந்த நிலையில் தற்போது முதல் முறையாக இந்திய ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு தனது யூடியூப் பக்கத்தில் நியாயத்துடன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது மிகவும் கடினமாகும். இதை பாகிஸ்தான் உட்பட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இதர நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் பாகிஸ்தான் அணியில் தேவையான திறமை இருந்தும் சமீப காலங்களில் சொந்த மண்ணில் இந்தியாவைப் போல் தொடர் வெற்றிகளை பெறவில்லை. என்ன கேட்டால் உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் இந்த தொடர் வெற்றிகளை பெறுவது இந்தியாவின் ஒரு சாதனையாகும். அதே சமயம் நியூசிலாந்து மோசமான அணியல்ல. அவர்கள் தரவரிசையில் டாப் இடத்தில் உள்ளனர்”

Ramiz Raja IND vs Pak

“மாறாக அவர்கள் தங்களுக்கு தாங்களே தோற்கடித்துக் கொண்டார்கள். குறிப்பாக தொடரில் அவர்களிடம் தன்னம்பிக்கை, வளைவுத் தன்மை மற்றும் தெளிவான பேட்டிங் இல்லை. மறுபுறம் இந்திய பந்து வீச்சாளர்களிடம் அதிகமான வேகமில்லை என்றாலும் தரம் உள்ளது. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் சிறப்பாக பந்து வீசும் அளவுக்கு தங்களை முன்னேற்றியுள்ளார்கள். மேலும் அவர்கள் ஸ்லீப் பீல்டர்களை வைத்து எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்குவதை பார்க்கும் போது சிறப்பாக உள்ளது. ஸ்பின்னர்களும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியால் வெற்றியும் கண்டார்கள்” என்று பாராட்டினார்.

இதையும் படிங்க: வீடியோ : ஒழுங்கா சச்சினிடம் மன்னிப்பு கேளுங்க, நேரலையில் ஆர்பி சிங் – ஆகாஷ் சோப்ரா ருசிகர வர்ணனை, சச்சினின் பதில் இதோ

முன்னதாக கடைசியாக கடந்த 2019இல் சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் தொடரில் தோற்ற இந்தியா அதன் பின் தொடர்ந்து 7 தொடர்களில் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement