- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய வீரரான இவர் இரட்டைசதம் அடிப்பார் – ரமேஷ் ராஜா கருத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் சவுதாம்ப்டன் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி குறித்த எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் ? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் ? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் தொகுப்பாளரான ரமேஷ் ராஜா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதில் இந்திய அணியின் வீரர் ஒருவரால் இந்த இறுதிப் போட்டியில் இரட்டை சதம் அடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மாவால் நிச்சயம் இரட்டை சதத்தை அடிக்க முடியும். அவர் முதல் இன்னிங்சில் சிறிது நேரம் செட்டாகி விட்டால் நிச்சயம் இரட்டை சதத்தை அடிப்பார். மேலும் ஆட்டம் எவ்வாறு செல்கிறதோ அதற்கு ஏற்றார்போல் தனது மனநிலையை மாற்றி விளையாடும் தன்மை ரோஹித் மற்றும் கில் ஆகியோருக்கு இருக்கிறது.

எனவே நிச்சயம் ரோகித்சர்மா சிறிது நேரம் களத்தில் நின்று பந்துகளை அதிகளவு சந்தித்தால் அவர் செட்டாகி இரட்டை சதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என ரமேஷ் ராஜா கூறியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : இந்திய அணி துவக்கத்தில் இந்த மைதானத்தில் சற்று தடுமாறினாலும் பிறகு மைதானத்தின் தன்மை அறிந்து சிறப்பாக விளையாடுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

ரோஹித் மற்றும் கில் ஆகியோர் இது போன்ற கண்டிஷன்களில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள்தான் அவர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இந்திய அணி சிறப்பாக ரன்களை குவிக்க முடியும் என்றும் இந்த போட்டியில் இந்தியாவின் கை ஓங்கி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது எனவும் ரமேஷ் ராஜா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by