மைதானத்தின் ரெண்டு பக்கமும் அலட்சியமாக ரன்களை குவிக்கிறார். இளம்வீரரை பாராட்டிய – பாகிஸ்தான் முன்னாள்வீரர்

Ramiz-Raja
- Advertisement -

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமேஷ் ராஜா இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களை பாராட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கிய இஷன் கிஷன் 32 பந்துகளில் 56ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் பெற்றதோடு மட்டுமல்லாமல் அந்த ஆட்டத்தில் மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தையும் பெற்றார். அப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 164 ரன்கள் குவித்து இருந்தது.

ishan 2

- Advertisement -

பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி. ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் கோலியுடன் ஜோடி போட்ட இஷன் கிஷன் தனது முதல் சர்வதேச டி20 போட்டி என்கிற பயம் துளிகூட இல்லாமல் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என 32 பந்துகளில் 56 ரன்கள் குவித்து மிகப்பெரிய தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பேசிய பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா இஷன் கிஷனது திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இஷான் கிஷன் அது ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது எந்த வித பயமும் இல்லாமல் அனைத்து ஏரியாக்களிலும் அழிக்கும் ஆற்றல் பெற்றவராக தெரிகிறார். லெக் சைட் மட்டும் ஆஃப் சைட் என இரண்டு பக்கத்திலும் அலட்சியமாக ரன்களை அடிக்கிறார். ஐபிஎல் லீக் தொடர்களில் நன்றாக ஆடி வந்த இஷான் கிஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்து அவரை இன்று வருங்கால இந்திய அணியின் நம்பிக்கை நாயகனாக மாற்றியுள்ளது.

ishan 1

சரியான வீரர்களுக்கு சரியான வாய்ப்பு கொடுப்பது தான் சரியான முறை. அதை இந்திய அணி சரியாக செய்து உள்ளது. இஷான் கிஷன் தனது முதல் போட்டியில் ஆடும் பொழுது மறுமுனையில் விராட் கோலி நின்றுகொண்டிருந்தார்.விராட் கோலி போன்ற ஒரு வீரர் மறுமுனையில் இருக்கையில் எந்த ஒரு வீரருக்கும் பயம் இருக்காது.

Ishan

அன்று விராட்கோலி இஷான் கிஷனுக்கு சரியான வகையில் ஆலோசனை வழங்கி சப்போர்ட் கொடுத்தார்.அவர் போன்ற ஒரு வீரர் மறுமுனையில் இருக்கையில் எந்த ஒரு வீரரும் நம்பிக்கையுடன் ஆடலாம் என்றும் மேலும் விராட் கோலி இன்றைய காலகட்டத்து விவியன் ரிச்சர்ட்ஸ் எனவும் கூடுதலாக கூறினார்.

Advertisement