WTC Final : நாட்டை விட ஐபிஎல் முக்கியம்னு இருந்த உங்களுக்கு எப்டி வெற்றி கிடைக்கும் – இந்தியாவை விளாசும் முன்னாள் பாக் வீரர்

IND vs AUS
- Advertisement -

இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 327/3 ரன்கள் குவித்து கோப்பையை வெல்லும் அளவுக்கு ஆரம்பத்திலேயே வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அப்போட்டியில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர்கள் நேரம் செல்ல செல்ல சுமாராக பந்து வீசியதை பயன்படுத்திய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக டேவிட் வார்னர் 43, ஸ்டீவ் ஸ்மித் 95*, டிராவிஸ் ஹெட் 146* என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுத்து சவாலை கொடுத்தனர்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் வானிலையை கருத்தில் கொண்டு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தவறிய ரோகித் சர்மாவின் முடிவும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை கழற்றி விட்ட முடிவும் உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதைவிட பொதுவாக சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணியினர் ஸ்விங் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்தில் தடுமாறுவது காலம் காலமாக சகஜமாக இருந்து வருகிறது.

ஐபிஎல் தானே முக்கியம்:
அதில் சிறப்பாக செயல்பட முன்கூட்டியே பயணித்து தயாராவதும் தரமான 11 பேர் அணியை களமிறக்குவதும் அவசியமாகிறது. அந்த நிலையில் கடந்த ஃபைனலுக்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் வென்று கால சூழ்நிலைகளுக்கு முழுமையாக தயாராகி களமிறங்கிய நியூசிலாந்து கோப்பையை வென்றது. மறுபுறம் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு 10 நாட்கள் முன்பாக இங்கிலாந்துக்கு பயணித்து வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர் நேரடியாக ஃபைனலில் களமிறங்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Kohli

ஆனால் அதிலிருந்து எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இம்முறையும் 10 நாட்கள் முன்பாக முக்கிய வீரர்கள் இங்கிலாந்து வந்த நிலையில் ஜடேஜா, ரகானே போன்றவர்கள் ஃபைனலில் விளையாடி விட்டு 2 நாட்கள் முன்பாக தான் இந்திய அணியுடன் இணைந்தனர். இந்நிலையில் சவாலான இங்கிலாந்து கால சூழ்நிலைகளில் நடைபெறும் இந்த ஒரே ஒரு போட்டியில் வெற்றி காண்பதற்கு முன்கூட்டியே பயணித்து ஒரு சில பயிற்சி போட்டிகளில் விளையாட தவறியதே இந்தியாவின் தடுமாற்றத்திற்கு காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தாமதமாக இங்கிலாந்துக்கு வந்த இந்திய பவுலர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிய களைப்பில் இப்போட்டியில் முதல் நாளே சோர்வடைந்து விட்டதால் எப்படி வெற்றி காண முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “பொதுவாக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது மிகவும் கடினமாகும். அதிலும் குறிப்பாக வெப்பமான இந்திய துணை கண்டத்திலிருந்து வரும் அணிகள் குளிர்ச்சியான சூழலை கொண்ட இங்கிலாந்துக்கு தங்களை உட்படுத்திக் கொள்வதற்கே 5 – 6 நாட்கள் தேவைப்படும்”

Ramiz Raza Rohit Sharma

“அந்த நிலையில் இப்போட்டிக்கு முன்பாக இந்தியா ஒரு பயிற்சி போட்டியில் கூட விளையாடாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் ஃபைனல். இதற்கு முன்பாக நீங்கள் குறைந்தது குழுக்களாகப் பிரிந்து அணிகளிடையேயாவது சில பயிற்சி போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். சொல்லப்போனால் இந்த சூழ்நிலையில் 3 – 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தால் கூட உங்களால் விரைவில் உட்படுத்திக் கொண்டிருக்க முடியும்”

இதையும் படிங்க: WTC Final : அஸ்வின் எடுக்காதது கூட பரவால்ல, ஆஸிக்கு எதிரா இப்டியா கேப்டன்ஷிப் பண்ணுவீங்க? ரோஹித்தை மீண்டும் விமர்சித்த கங்குலி

“ஏனெனில் இங்குள்ள கால சூழ்நிலைகள் மற்றும் பிட்ச் முற்றிலும் வித்தியாசமானது என்பதால் அதற்கேற்ற போல் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக பவுலர்கள் தங்களுடைய லைன் மற்றும் லென்த்துக்களை இங்கே மாற்ற வேண்டும். ஆனால் ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வெறும் 4 ஓவர்களை மட்டுமே வீசிய அவர்கள் இங்கு ஒரே நாளில் 17 ஓவர்களை வீச வேண்டும். அதற்கு உங்களுடைய உடலுக்கு ஓய்வு தேவை” என்று கூறினார்.

Advertisement