ஐ.பி.எல் தொடருக்கு சவால் விடும் வகையில் உலகிலேயே முதல் முறையாக புதிய தொடரை ஆரம்பிக்கவுள்ள – பாக்

Ramiz-Raja
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொரின் 15-வது சீசன் கடந்த மார்ச் மாத இறுதியில் கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வரும் இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களுக்கு நிறைய திரில்லர் தருணங்களை விருந்தாக படைத்தது. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுமூச்சுடன் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டில் 8 அணிகளுடன் ஒரு சாதாரண கிரிக்கெட் தொடராக துவங்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் ஒவ்வொரு வருடமும் தன்னை மெருகேற்றிக் கொண்டு இன்று ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட தரமான தொடராக உருவெடுத்துள்ளது. கடந்த பல வருடங்களில் பல புதிய பரிணாமங்களை கொண்டுள்ள இந்த தொடர் தரத்திலும் பணத்திலும் உலக அளவில் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்து இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று கூறலாம்.

போட்டிக்கு பாக்:
இன்று 10 அணிகள் கொண்ட தொடராக விளையாடப்படும் இந்த தொடரின் வாயிலாக ஒரு வருடத்தில் 4000+ கோடிக்கும் மேல் பிசிசிஐ வருமானம் ஈட்டும் நிலையில் இதன் வாயிலாக நிறைய கிரிக்கெட் வீரர்களின் வாழ்வாதாரமும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இப்படி தரத்திலும் பணத்திலும் உயர்ந்து நிற்கும் ஐபிஎல் தொடரை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் தங்களது நாட்டில் இதேபோன்ற டி20 தொடர்களை நடத்தி வருகின்றன.

Ganguly-ipl
IPL MI

அந்த வரிசையில் இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் கடந்த 2016 முதல் பாகிஸ்தான் பிரீமியர் லீக் என்ற பெயரில் பிஎஸ்எல் தொடரை நடத்தி வருகிறது. எப்படியாவது ஐபிஎல் தொடரை முந்தி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு வருடமும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல முயற்சிகளை எடுத்தாலும் இதுநாள் வரை ஐபிஎல் தொடரின் பாதி அளவு வெற்றியை கூட பிஎஸ்எல் தொடரால் தொட முடியவில்லை.

- Advertisement -

ரமீஸ் ராஜா புதிய பிளான்:
அதிலும் தற்போது அந்த தொடரில் விளையாடுவதற்கான வீரர்களை வாங்க டிராப்ட் முறையை கையாளும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதில் துளி அளவுகூட வெற்றியை பெற முடியாத காரணத்தால் வேறு வழியின்றி அடுத்த வருடம் முதல் ஐபிஎல் தொடரை போல ஏல முறையை கையாளப் போகிறோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். இப்படி ஐபிஎல் தொடரை பின்பற்றும் நிலையில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக எங்களைப் பார்த்து நீங்கள் பாலோ செய்யுங்கள் என இந்தியாவிற்கு சவாலை அளிப்பது போல் புதிதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Ramiz Raja Sourav Ganguly

அதாவது உலகில் இதுநாள் வரை சீனியர் அளவில் மட்டுமே பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக ஜூனியர் லெவலில் அதை வரலாற்றிலேயே முதல் முறையாக தங்க நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஜூனியர் லீக் (பிஜேஎல்) என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அறிவித்துள்ளார். இது ஸ்பான்சர்ஷிப், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், அணிகள் உரிமம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜேபிஎல் தொடர்:
இது பற்றி பாகிஸ்தான் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த பல நாட்களாக மும்மரமாக விவாதித்த பின் பாகிஸ்தான் ஜூனியர் லீக் சம்பந்தமான ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். உலகிலேயே முதல் முறையாக நடைபெறும் இதுபோன்ற தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. நகரங்களை அடிப்படையாக கொண்டு இதில் விளையாடும் அணிகளுக்கான வீரர்கள் டிராப்ட் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் குறிப்பிட்ட வயதிற்கு கீழ் உள்ள சர்வேதேச வீரர்களும் கலந்து கொள்வார்கள்”

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2022 : இந்த வருடத்தின் முதல் கொரோனா பாதிப்பு உறுதி – பாதிக்கப்பட்ட அந்த நபர் யார் தெரியுமா?

“அத்துடன் இதில் பங்கேற்கும் இளம் வீரர்களுக்கு பல ஜாம்பவான்கள் ஆலோசகர்களாகவும் பயிற்சியாளர்களாவும் செயல்பட நாங்கள் வழிவகை செய்வோம். இது தரமான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவாக்கும் ஒரு தொடராகும். இது உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு இடையே உள்ள தூரத்தை நிரப்பும் ஒரு தொடராகவும் அமையும்” என்று கூறியுள்ளார்.

Advertisement