ஐ.பி.எல் 2022 : இந்த வருடத்தின் முதல் கொரோனா பாதிப்பு உறுதி – பாதிக்கப்பட்ட அந்த நபர் யார் தெரியுமா?

Dc
- Advertisement -

உலகெங்கிலும் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி அனைவரையும் உலுக்கியது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது மட்டுமின்றி அனைத்து விதமான விளையாட்டு துறைகளும் பெரும் இன்னல்களை சந்தித்தன. குறிப்பாக கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்ததன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் முழுவதுமாக நடைபெறாமல் இருந்தது.

MI vs PBKS

- Advertisement -

இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்த வேளையில் இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்தப்பட்டதாலும் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதாலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்தியாவிலேயே நடைபெற்று வருகிறது. ஆனாலும் இன்னும் முழுவதும் கொரோனா அச்சம் நீங்காத காரணத்தால் குறிப்பிட்ட நான்கு மைதானங்களில் மட்டுமே லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதோடு இந்த லீக் போட்டிகளில் வீரர்களுக்கு தனியாக விதிமுறைகளும், பார்வையாளர்களுக்கு தனியாக விதிமுறைகளும் என சரியான முறையில் கட்டமைக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நான்கு மைதானங்களில் மட்டுமே நடைபெறும் வேளையில் பிளே ஆப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை வேறு மைதானத்தில் நடைபெற உள்ளன.

patrick

கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது சிறப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதுவரை எந்தவித பாதிப்பும் இல்லாமல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட அந்த நபர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் தான்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை டெல்லி அணி பங்கேற்றுள்ள நான்கு போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முக்கியமான 27 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட இருக்கும் வேளையில் அவர்களது பிசியோதெரபிஸ்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்த வருஷம் டீம் டேபிள் டாப்பர்னு எந்த அணி தெரியுமா? கெத்து காட்டும் ரசிகர்கள் – புள்ளிவிவரம் இதோ

இதன் காரணமாக இன்றைய லீக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வருடத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இருப்பினும் அவருக்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிச்சயம் போட்டி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement