இந்த வருஷம் டீம் டேபிள் டாப்பர்னு எந்த அணி தெரியுமா? கெத்து காட்டும் ரசிகர்கள் – புள்ளிவிவரம் இதோ

GT
- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் மும்பை நகரில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து பல விறுவிறுப்பான திரில்லர் நிறைந்த போட்டிகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் முக்கியமான 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் முதல் வாரத்திலிருந்தே பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

- Advertisement -

மிரட்டும் குஜராத் டைட்டன்ஸ்:
அந்த வகையில் இந்த வருடம் 5000+ கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதிலடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த அணி எங்கே வெல்லப் போகிறது என பலரும் ஆரம்பத்தில் குஜராத் அணியை பற்றிய கணித்தார்கள்.

ஆனால் சிறப்பான பேட்டிங், பவுலிங் என ஆல்-ரவுண்டராக மிரட்டும் அவர் கேப்டனாகவும் முக்கியமான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்து தன் மீதும் தனது அணி மீதும் வைக்கப்பட்ட கணிப்புகளை பொய்யாக்கியுள்ளார். அதிலும் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான தனது 5-வது போட்டியில் பேட்டிங்கில் 87* ரன்களை விளாசி அவர் பந்து வீச்சில் 1 விக்கெட் பீல்டிங்கில் 1 ரன் அவுட் என ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Pandya

டேபிள் டாப்பார் குஜராத்:
அந்த காரணமாக முதலிடத்தில் இருந்த ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளிய குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வெல்வதற்கு தன்னை ஒரு தகுதியான அணி என நிரூபித்துள்ளது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடன் டேவிட் மில்லர், ராகுல் திவாடியா போன்றவர்கள் மிரட்டுகின்றனர். எனவே டாப் ஆர்டரில் மிரட்டும் சுப்மன் கில்லுக்கு ஆதரவாக வேறு ஒரு பேட்ஸ்மேன் இதுவரை ரன்கள் குவிக்காதது மட்டுமே அந்த அணிக்கு உள்ள குறையாகும்.

- Advertisement -

ஏனெனில் பாண்டியா தலைமையில் முகமது சமி, லாக்கி பெர்குசன், ரசித் கான் என அந்த அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது. மொத்தத்தில் இந்த வருடம் கோப்பையை வெல்லக்கூடிய ஒரு தகுதியான அணியாக உருவெடுத்துள்ள குஜராத் டைட்டன்ஸ் தற்போது உள்ளது போலவே லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் டேபிள் டாப்பராக நம்பர் ஒன் இடத்தை பிடிக்குமென அந்த அணி ரசிகர்கள் கெத்தாக சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.

ipl

1. அதற்கு காரணம் கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் இதே குஜராத் பெயரில் விளையாடிய குஜராத் லயன்ஸ் அணியாகும். ஆம் சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தடைபெற்ற அந்த வருடங்களில் உருவாக்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகளில் குஜராத் லயன்ஸ் என பெயரிடப்பட்ட அந்த அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

2. அதிலும் தனது முதல் சீசனான 2016இல் முதல் முறையாக களமிறங்கிய குஜராத் லயன்ஸ் தனது முதல் 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது. அதன்பின் ஹைதெராபாத் அணிக்கு எதிராக நடந்த 4-வது லீக் போட்டியில் தோற்றாலும் 5-வது போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய அந்த அணி மொத்தம் பங்கேற்ற 14 போட்டிகளில் 9 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து லீக் சுற்றின் முடிவில் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Hardik Pandya GT Vs RR

3. அதன்பின் நடந்த பிளே ஆப் சுற்றில் தோல்வி அந்த அணி அடைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் முதல் வருடத்திலேயே அபாரமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு சென்றது அனைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

- Advertisement -

3. அந்த வகையில் இந்தவருடம் கிட்டத்தட்ட அதே குஜராத் டைட்டன்ஸ் என்ற பெயரில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் தனது முதல் சீசனிலையே அபாரமாக செயல்பட்டு தனது முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் அச்சில் வார்த்தார் போல் தனது 4-வது போட்டியில் ஹைதெராபாத் அணியிடம் குஜராத் தோல்வி அடைந்தது. அதன்பின் ராஜஸ்தானுக்கு எதிரான 5-வது போட்டியில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இதையும் படிங்க : தொடர்ந்து 2 வாரமாக ஐபிஎல் தொடருக்கு ஏற்பட்ட பின்னடைவு ! மவுசு குறைந்துவிட்டதா – விவரம் இதோ

4. அதாவது 2016-ஆம் ஆண்டு முதல் 5 போட்டிகளில் குஜராத் லயன்ஸ் எப்படி செயல்பட்டதோ அதே போல எந்தவித மாற்றமும் இன்றி இந்த வருடம் அச்சில் வார்த்தது போல குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் 5 போட்டிகளில் செயல்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தின் டேபிள் டாப்பர் குஜராத் தான் என்று அந்த அணி ரசிகர்கள் கூறுவதில் எந்த தவறும் இல்லை என்றே கூறலாம்.

Advertisement