10 கோடி குடுக்குறனு சொன்னாங்க.. ஆனாலும் கே.கே.ஆர் அணியை விட்டு போக மனசில்ல – ரமன்தீப் சிங் நெகிழ்ச்சி

Ramandeep Singh
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அந்த அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டராக விளையாடிய ரமன்தீப் சிங் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக 4 கோடி ரூபாய்க்கு ரீடெயின் செய்யப்பட்டார். குறிப்பாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரையே அந்த அணி வேண்டாம் என்று வெளியேற்றி இருந்தது.

பணத்தை விட விசுவாசம் தான் முக்கியம் : ரமன்தீப் சிங் பேட்டி

அவ்வேளையில் இளம் ஆல்ரவுண்டரான அவரை நீண்ட கால பிளேயராக கருத்தில் கொண்டு தக்கவைத்து தற்போது நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரிலும் பிளேயிங் லெவனில் இடம் கொடுத்து விளையாட வைத்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணியானது :

- Advertisement -

6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு தன்னை 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் அணுகியதாகவும் ஆனால் கே.கே.ஆர் அணியின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக தான் அந்த வாய்ப்பு மறுத்து விட்டதாகவும் ரமன்தீப் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு மெகா ஏலத்திற்கு முன்னதாக எனக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் ரிட்டன்ஷனுக்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று கோரிக்கைகள் வந்தன. மேலும் என்னை மெகா ஏலத்திற்கு வந்தால் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக உள்ளோம் என்றும் கூறினார்.

- Advertisement -

ஆனாலும் நான் பணத்தை விட கே.கே.ஆர் அணியின் மீது வைத்துள்ள விசுவாசம் தான் முக்கியம் என்று நினைத்தேன். ஏனெனில் எனக்கு தேவையான நேரத்தில் மிகப்பெரிய இடத்தை கொடுத்தது கே.கே.ஆர் அணி தான். கே.கே.ஆர் அணியால்தான் தற்போது நான் ஒரு மிகச் சிறப்பாக வீரராக மாறி எனது வாய்ப்பில் நிலைத்து நின்று விளையாடி வருகிறேன்.

இதையும் படிங்க : 30000 ரூபாய்.. வினோத் காம்ப்ளிக்கு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் செய்த மெகா உதவி.. ரசிகர்கள் பாராட்டு

எனவே பணத்தைவிட அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையும், கொடுத்த ஆதரவும் தான் எனக்கு முக்கியம் என்று கே.கே.ஆர் அணியிலேயே இருக்க ஒப்புக்கொண்டேன். அந்த வகையிலேயே கே.கே.ஆர் அணி நிர்வாகிகளும் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே என்னை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தனர் என ரமன்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement