30000 ரூபாய்.. வினோத் காம்ப்ளிக்கு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் செய்த மெகா உதவி.. ரசிகர்கள் பாராட்டு

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மறக்க முடியாத ஒருவராக அறியப்படுகிறார். சச்சின் டெண்டுல்கருடன் பள்ளியளவில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்த அவர் இந்தியாவுக்காகவும் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஆரம்பத்திலேயே இரட்டை சதம் சதங்களை அடித்து வெளுத்து வாங்கிய அவர் மிகப்பெரிய நட்சத்திரமாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இளம் வயதிலேயே கிடைத்த பணம், புகழ் ஆகியவற்றால் கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்தத் தவறிய காம்ப்ளி சுமாராக விளையாடத் துவங்கினார். அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் அசத்தவில்லை. அப்படியே மது போன்ற தவறான விஷயங்களில் ஈடுபட்ட அவரால் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

தடுமாறும் காம்ப்ளி:

அவருடைய நண்பர் சச்சின் இன்று உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானாக வளர்ந்தது வேறு கதை. மறுபுறம் கிரிக்கெட்டில் புகழையும் வாய்ப்பையும் இழந்த வினோத் காம்ப்ளி ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார். கூடவே தவறான பழக்கங்களில் ஈடுபட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சமீபத்தில் உயிருக்கு போராடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதிலிருந்து சச்சின் டெண்டுல்கர் போன்ற நண்பர்கள் செய்த உதவியுடன் மீண்டு வந்த அவர் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளார். 2013இல் ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர் உதவியுடன் 2 முறை இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அவரால் பெரிய வேலைகளும் செய்ய முடிவதில்லை. அந்த சூழ்நிலையில் 2024 டிசம்பர் மாதம் மும்பையில் சச்சின் டெண்டுல்கர், காம்ப்ளி போன்ற பல வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர் ராம்நாத் அக்ரேக்கர் நினைவு மண்டபம் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

- Advertisement -

கவாஸ்கர் மனசு:

அந்த நிகழ்ச்சிகள் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்றவர்கள் கலந்து கொண்டனர். அதில் வினோத் காம்ப்ளி நடக்க முடியாமல் தடுமாற்றமாக கலந்து கொண்டு தனது ரோல் மாடல் கவாஸ்கர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அதைப் பார்த்து ஆதங்கப்பட்ட சுனில் கவாஸ்கர் விரைவில் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன் படி தற்போது அவருக்கு மாதம் 30000 ரூபாய் பொருளாதார உதவி செய்ய கவாஸ்கர் வழிவகை செய்துள்ளார்.

இதையும் படிங்க: தோனி முடிச்சுடுவாருன்னு தெரிஞ்சும்.. ரிஷப் பண்ட் அந்த திட்டத்தை மிஸ் பண்ணாரு.. நானும் பேசல.. பிஸ்னோய் பேட்டி

அதாவது இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் 1999இல் சாம்ப்ஸ் (சாம்பியன்கள்) எனும் பெயரில் அறக்கட்டளை துவங்கி ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த அறக்கட்டளையிலிருந்து காம்ப்ளிக்கு மாதம் 30000 ரூபாய் வழங்க கவாஸ்கர் ஏற்பாடு செய்துள்ளார். அது போக வாழும் வரை வருடத்திற்கு ஒரு முறை 30000 ரூபாய் மருத்துவ செலவுக்கும் கவாஸ்கர் வழிவகை செய்துள்ளது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement