இந்திய அணிக்கு பெரிய குழப்பமே இந்த விஷயத்தால் தான் வரப்போகுது – எச்சரித்த ராஜ்குமார் சர்மா

Rajkumar
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலியின் சிறு வயது பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா அவ்வப்போது இந்திய அணியில் நடைபெறும் மாற்றங்கள் குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக பகிரும் வழக்கம் கொண்டவர். அந்த வகையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை அடுத்து தற்போது ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் ஏற்பட இருக்கும் ஒரு இக்கட்டான சூழல் குறித்து தற்போது தனது கருத்தினை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Axar Patel

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : தற்போதைய இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக துவக்க வீரர்கள் அதிகப்படியான அளவில் மாற்றப்பட்டு வருவதால் நிச்சயம் இது அணிக்கு பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தும். ஏனெனில் டி20 வடிவ கிரிக்கெட்க்கு முதன்மை துவக்க வீரராக ராகுல் இருக்கிறார்.

ராகுல் முழு உடல் தகுதியுடன் இருக்கும் போது அவரே ரோகித்துடன் களமிறங்குவார். ஆனால் அதேவேளையில் துவக்க வீரருக்கான இடத்தில் இஷான் கிஷனில் ஆரம்பித்து ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா என தற்போது சூரியகுமார் யாதவ் வரை ஏகப்பட்ட வீரர்களை இந்திய அணி பயன்படுத்தியுள்ளது.

Rishabh Pant 44

இப்படி அனைத்து வீரர்களுமே எல்லா இடத்திலும் விளையாட வேண்டும். அந்த அளவிற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று நிர்வாகம் நினைப்பது சரியாக இருந்தாலும் வீரர்கள் தாங்கள் எங்கு செய்ய பேட்டிங் செய்யப் போகிறோம் என்ற ஒரு தெளிவான மனநிலை இருக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

ஏனெனில் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் வீரர்கள் விளையாடும்போது தங்களது இடம் இதுதான் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அவர்களால் அந்த இடத்தில் செட்டிலாகி விளையாட முடியும். அவ்வப்போது வாய்ப்புகள் மாறிக்கொண்டே இருந்தால் அது வீரர்களின் நிலைத்தன்மையே முற்றிலுமாக போக்கிவிடும்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : 15 பேர் கொண்ட அணியை தவிர்த்து இந்திய அணியில் உள்ள 3 வீரர்கள் – யார் தெரியுமா?

எனவே துவக்க வீரர்களை அதிகப்படியாக மாற்றாமல் சரியான ஜோடியுடன் சரியான பேட்டிங் ஆர்டரை செட் செய்து விளையாட வேண்டியது அவசியம் என்று ராஜ்குமார் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement