ஐ.பி.எல் தொடரை நிறுத்தியதற்கான காரணம் இதுதான். தெளிவான விளக்கத்தை கொடுத்த – ராஜீவ் சுக்லா

Rajiv-Shukla

இந்தியாவில் ஏப்ரல் மாதம் 09 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த பதிந்த 14வது ஐபிஎல் தொடரானது 29 லீக் போட்டிகள் நடைபெற்ற பிறகு நேற்று ஒரு போட்டி ரத்தானது. அதனைத் தொடர்ந்து இன்றும் சில வீரர்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக தற்காலிகமாக இந்த தொடர் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL

இதுகுறித்து மேலும் பேசிய அவர் இந்த தொடர் நிறுத்தத்திற்கான காரணத்தை தெளிவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் இது இதனால் இந்த விடயத்தில் எந்தவித சமரசமும் எங்களால் செய்ய முடியாது.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதியே தற்போது ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் மற்றும் பங்கேற்று உள்ள தொழில்நுட்ப ஊழியர்களும் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் முறையாக எடுப்போம்.

கொரோனா சூழலில் மக்களை மகிழ்விக்க இந்த தொடரானது தொடர்ந்து நடைபெற்று வந்தது எனவே வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு விஷயத்தில் எங்களால் எந்த சமரசமும் செய்ய முடியாது. என்பதனால் இந்த தொடரை தற்போது நிறுத்தி உள்ளோம். பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகிகள் குழு என அனைவரது ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று ராஜீவ் சுக்லா தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Saha 2

நேற்று கொல்கத்தா அணியின் வீரர்கள் இருவருக்கும் கொரோனா உறுதியான நிலையில் இன்று டெல்லி அணியில் அமித் மிஸ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் அணியில் விருத்திமான் சஹா ஆகியோருக்குப் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இப்படி நாளுக்கு நாள் கொரோனா வீரர்களிடையே பரவ தொடங்கியதன் காரணமாக இந்த தொடரானது தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.