விராட், ரோஹித்தை பிசிசிஐ கட்டாயமாக ஓய்வு பெற வைத்ததா? ஒன்டே ரிட்டையர்மென்ட் எப்போது? ராஜிவ் சுக்லா விளக்கம்

Rajiv Shukla
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இரு தூண்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்று வருகிறார்கள். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜோடியாக ஓய்வு பெற்றார்கள். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே அவர்கள் தடுமாற்றமாக செயல்பட்டு வந்தார்கள்.

குறிப்பாக கடந்த நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக ஒயிட்வாஸ் படுதோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரிலும் 10 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்டது. அந்த 2 தோல்விகளுக்கும் விராட், ரோஹித் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.

- Advertisement -

பிசிசிஐ கொள்கை:

அதனால் அவர்களை தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வந்தன. அதற்கு முன்பாக ரோகித் சர்மா முதலில் ஓய்வு பெற்றார். அடுத்த சில நாட்களில் விராட் கோலியும் ஓய்வு பெற்றது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இதற்கிடையே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல அந்த இருவரும் முக்கிய பங்காற்றினார்கள்.

அதனால் 2027 உலகக் கோப்பையில் அவர்கள் நிச்சயம் விளையாடுவார்கள் என்று இந்திய ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலும் ரோஹித்தை கழற்றி விட்டு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் மற்றொரு செய்தி வெளியானது. எனவே 2027 உலகக் கோப்பைக்கு முன் அவர்களை ஒருநாள் கிரிக்கெட்டிலும் பிசிசிஐ ஓய்வு பெற வைப்பதற்கு வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ராஜிவ் சுக்லா விளக்கம்:

இந்நிலையில் விராட், ரோஹித்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் பிசிசிஐ வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைக்கவில்லை என்று துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பற்றி சிந்திக்காமல் அவர்களுக்கு அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மீண்டும் ஒருமுறை நான் அனைவருக்கும் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்”

இதையும் படிங்க: ஜடேஜாவுக்கு இந்தியாவை ஜெய்க்க வைக்கும் எண்ணமே இல்ல.. 50 மணி நேரத்தில் 50 அடிச்சாரு.. மஞ்ரேக்கர் அதிருப்தி

“விராட், ரோஹித் இல்லாததை நாங்களும் உணர்கிறோம். ஓய்வு முடிவை விராட், ரோஹித் ஆகியோர் தங்களது சொந்த வழியில் எடுத்தார்கள். பிசிசிஐ எந்த வீரரையும் ஓய்வு பெறச் சொல்லக்கூடாது என்ற கொள்கையை வைத்துள்ளது. ஓய்வு என்பது வீரர்களுடைய முடிவு. எனவே விராட், ரோஹித் தங்களது சொந்த வழியில் ஓய்வு பெற்றனர். நாங்கள் எப்போதும் அவர்களை ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக கருதுகிறோம். எங்களுக்காக அவர்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது நல்ல விஷயம்” என்று கூறினார்.

Advertisement