லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அந்தப் போட்டியில் 193 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டரில் ராகுல் 39 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்காததால் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது.
அப்போது டெய்ல் எண்டர்களுடன் லோயர் ஆர்டரில் ஜோடி சேர்ந்த ஜடேஜா 61* ரன்கள் எடுத்து பாறையை போல் வீரனாகப் போராடியும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை டாப் ஆர்டரில் யாராவது 50 ரன்கள் அடித்திருந்தால் கூட ஜடேஜாவின் போராட்டம் இந்தியாவை வெற்றி பெற வைத்திருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் அந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக போராடியதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
ஜெய்க்க வைக்கும் எண்ணமில்லை:
ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பவுண்டரிகள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜடேஜா விளையாடவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்து அனைத்து பந்துகளையும் உறுதியாக தடுத்தார். ஆனால் இந்தியாவை வெற்றி பெற வைக்க உதவுவதற்காக அவர் ரிஸ்க் எடுத்ததாக தெரியவில்லை”
“நம்பிக்கைக்கு எதிராக நம்பிக்கையுடன் நின்ற அவர் காத்திருப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போதெல்லாம் ஜடேஜா இந்தளவுக்கு தம்முடைய தடுப்பாட்டத்தை நம்புகிறார் என்பதைப் பார்ப்பது இதயத்தைத் தொடுகிறது. இப்போதெல்லாம் அவர் பொறுமையுடன் தம்முடைய அணிக்காக நீண்ட இன்னிங்ஸில் அடிக்கிறார். முதல் இன்னிங்ஸில் அடித்த 70 ரன்களை கூட அவர் வேகமாக குவிக்கவில்லை”
மஞ்ரேக்கர் விமர்சனம்:
“அவர் 4 மணி நேரங்கள் விளையாடி 70 ரன்கள் அடித்தார். அந்த பிட்ச்சில் அவருடைய ஆட்டத்தைப் பார்த்த போது 50 ரன்கள் அடிப்பதற்கு 50 மணி நேரம் விளையாட வேண்டும் என்பது போல் இருந்தது. அதனாலேயே ஜடேஜா அரை சதத்தை அடித்த போது பால்கனியில் அமர்ந்திருந்த இந்திய அணியிடம் நேர்மறையான உணர்வுகள் தென்படவில்லை. அங்கே அமர்ந்திருந்த இந்திய அணியினர் வெற்றி பெறுவது கடினம் என்பதை அறிந்ததாக தெரிகிறது”
இதையும் படிங்க: ஜடேஜாவை மட்டும் இந்த விடயத்தில் குறை சொல்வது தவறு.. மத்தவங்களையும் பாருங்க – முகமது அசாருதீன் கருத்து
“ஜடேஜா முயற்சித்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பிட்ச், சூழ்நிலை, இந்தியாவின் ஸ்கோரிங் ரேட் ஆகியவை வெற்றியை அப்பாற்பட்டதாகியது” என்று கூறினார். முன்னதாக கடந்த காலங்களிலும் ஜடேஜா சிறப்பாக விளையாடியும் மஞ்ரேக்கர் இப்படி விமர்சித்துள்ளார் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். இதைத் தொடர்ந்து 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி துவங்க உள்ளது.



