ஜடேஜாவை மட்டும் இந்த விடயத்தில் குறை சொல்வது தவறு.. மத்தவங்களையும் பாருங்க – முகமது அசாருதீன் கருத்து

Azharuddin
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி விளையாடிய இந்திய அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அதனால் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தது. இதன் காரணமாக இந்திய அணி நிச்சயம் இந்த இலக்கினை எட்டிப் பிடித்து விடும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

ஜடேஜாவை மட்டும் குறை கூறுவது தவறு : முகமது அசாருதீன்

ஆனால் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இந்திய அணியானது 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா தனி ஆளாக 181 பந்துகளை சந்தித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் குவித்திருந்தார்.

- Advertisement -

இப்படி இந்திய அணி இந்த எளிய இலக்கை துரத்த முடியாமல் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்த வேளையில் இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் பார்க்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களில் கே.எல் ராகுலை தவிர்த்து வேறு எந்த வீரரும் பெரியதாக ரன் அடிக்கவில்லை. ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி இறுதிவரை வெற்றிக்காக போராடிய ரவீந்திர ஜடேஜா மீது அதிகளவு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

ஏனெனில் கடைசி நேரத்தில் பந்துவீச்சாளர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய ஜடேஜா இன்னும் சற்று அதிரடியாக விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று பலரும் குறை கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் கூறுகையில் :

- Advertisement -

போட்டியின் கடைசி நாளில் இந்திய அணியின் வீரர்கள் சற்று அதிரடியாக விளையாடியிருந்தால் நிச்சயம் வெற்றிக்கான வாய்ப்பு இருந்திருக்கும் என்பது உண்மைதான். அதேஒன்று ஜோ ரூட் மற்றும் சோயிப் பஷீர் ஆகியோரது ஓவர்களில் ஜடேஜா கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் வரை அடித்திருந்தால் இந்திய அணியால் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனாலும் அவருடைய பேட்டிங்கை மட்டும் நாம் இந்த விடயத்தில் குறை கூறுவது தவறு.

ஏனெனில் அவர் மட்டும்தான் இறுதிவரை அணிக்காக பாறை போல் நின்று காப்பாற்ற முயற்சி செய்தார். அதனால் அவரது இந்த இன்னிங்ஸை நாம் குறை கூறக்கூடாது. இரண்டாவது இன்னிங்ஸில் நாம் பல்வேறு தவறுகளை செய்து விட்டோம். அதிலும் குறிப்பாக டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணியின் பவுலர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்தி விட்டார்கள்.

இதையும் படிங்க : நம்ம டீமோட ஸ்பெஷல் பிளேயர் இவர்தான்.. அவர் தொடர்ந்து ஆடனும்.. அதுதான் என் ஆசை – கங்குலி கருத்து

எனவே ஜடேஜாவை மட்டும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு டாப் ஆர்டரில் வந்த மற்ற பேட்ஸ்மேன்கள் செய்த தவறுகளையும் நாம் பார்க்க வேண்டும் என முகமது அசாருதீன் ஜடேஜாவிற்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement