இதான் கடைசி.. மூடுபனி பிரச்சனையை இதோடு முடிக்க வேற பிளான் வெச்சிருக்கோம்.. ராஜீவ் சுக்லா

Rajiv Shukla
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அதில் 3 போட்டிகள் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற 4வது போட்டி மூடுபனியின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்தியாவில் குளிர் காலம் நிலவுவதால் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருந்து வருகிறது. ஆனால் அந்த போட்டியில் டாஸ் கூட வீச முடியாத அளவுக்கு அதிகப்படியாக பொழிந்த பனி வெளிச்சத்தை மூடியது. அதனால் டாஸ் கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

இதான் கடைசி:

அதைப் பார்த்த உள்ளூர் ரசிகர்கள் பொதுவாகவே லக்னோவில் டிசம்பர் மாதம் பனி மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் அதை கருத்தில் கொள்ளாமல் பிசிசிஐ லக்னோவில் டிசம்பர் மாதம் போட்டியை நடத்தியதே இதற்கு காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் வடமாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் இப்படி பல போட்டிகள் மூடுபனியால் பாதிக்கப்படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

எனவே வருங்காலங்களில் டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரை நடைபெறும் போட்டிகளை தெற்கு அல்லது மேற்கு இந்தியாவில் நடத்துவோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். அதனால் மூடுபனியால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் ரத்தாகும் பிரச்சனை இத்தோடு மூடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சுக்லா பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பிசிசிஐ உறுதி:

“போட்டி மூடுபனி காரணமாக ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. அதனால் மக்கள் ஏமாற்றத்தைச் சந்தித்தனர். எனவே வரும் காலங்களில் டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரையிலான காலங்களில் வட இந்தியாவில் போட்டிகளை நடத்துவது பற்றி நாங்கள் மறுபரிசலனை செய்வோம். குறிப்பாக போட்டிகளை நாங்கள் தெற்கு அல்லது மேற்கு இந்தியாவுக்கு மாற்றலாமா என்று விவாதிப்போம்”

இதையும் படிங்க: அடுத்த ஆண்டு மட்டுமல்ல இனி வரப்போகும் பல ஆண்டுகள் இவர்தான் கேப்டன் – குஜராத் டைரக்டர் அளித்த பேட்டி

“ஏனெனில் உள்ளூர் போட்டிகள் கூட மூடு பனியால் பாதிக்கப்படுகின்றன. அது தீவிர பிரச்சனையாக இருந்து வருகிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பற்றி கடைசிப் போட்டி டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. அப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய தென்னாப்பிரிக்காவும், 3 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை வெல்ல இந்தியாவும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement