இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்.சி.பி அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
கே.கே.ஆர் அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு : ரஜத் பட்டிதார் பேச்சு
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக உணர்கிறேன். ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் சரியான நேரத்தில் அனைத்து வீரர்களும் பார்முக்கு வருவது அவசியம்.
அந்த வகையில் எங்களது அணியின் வீரர்கள் தேவையான இந்த முக்கியமான நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் வெற்றிக்கு கை கொடுப்பதால் தற்போது நாங்கள் இந்த தொடரின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறோம். முதல் பத்து ஓவர்களில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக கண்ட்ரோல் செய்து ரன் குவிப்பை கொண்டு சென்றதால் இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற முடிந்தது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி.. காயம் காரணமாக வெளியேறிய நட்சத்திர வீரர் – விவரம் இதோ
விராட் கோலி மிகச் சிறப்பான வீரர். அவரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளே கிடையாது. எங்களது அணிக்கு தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர் இனிவரும் போட்டியிலும் அசத்துவார் என்ற நம்பிக்கை உள்ளதாக ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.



