ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி மற்றும் 5 வெற்றி என 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் சென்னை அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வந்தது.
காயத்தால் வெளியேறிய நட்சத்திர வீரர் :
ஆனால் கடந்த மூன்று போட்டிகளாகவே ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ள சி.எஸ்.கே அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. இன்னும் சென்னை அணிக்கு லீக் சுற்று ஆட்டங்களில் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள வேலையில் இந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு உறுதி என்ற நிலை இருந்து வருகிறது.
இதன் காரணமாக சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவரும் சென்னை அணி பிளே ஆப் சுற்றிற்கு தகுதி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த விடயம் சென்னை அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் நிச்சயம் அளித்திருக்கும்.
அந்த வகையில் நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக அற்புதமான ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்த இங்கிலாந்து வீரர் ஜேமி ஓவர்டன் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இங்கிலாந்து சென்றடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சையை அவர் லண்டனில் மேற்கொள்ளவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷியை நான் இந்த அணியில் பார்க்க விரும்புகிறேன் – ஏ.பி.டி கருத்து
எனவே அவர் எஞ்சியுள்ள இந்த தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சி.எஸ்.கே அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



