எங்களோட முதல் எண்ணம் இதுதான்.. ஹைதராபாத் அணிக்கெதிரான தோல்விக்கு பின் – ரஜத் பட்டிதார் பேச்சு

Rajat Patidar
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஹைதராபாத் அணிக்கெதிரான தோல்விக்கு பின் : ரஜத் பட்டிதார் பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்தது. பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. அதன் காரணமாக சன் ரைசர்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் 200 ரன்கள் அடித்த ஆர்.சி.பி அணி தங்களது முதலிடத்தை தக்க வைத்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : எங்கள் அணியின் டாப் 5 வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறேன். இருந்தாலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது முதலில் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது.

இந்த மைதானத்தில் பந்து சற்று நின்று வந்ததால் முதல் இன்னிங்சின் போது அவர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேவேளையில் இரண்டாம் பாதியில் பந்துகளை எதிர் கொள்வதில் சற்று கடினம் இருந்தது. இருந்தாலும் இந்த போட்டியில் எங்களுடைய முதல் எண்ணமாக புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே யோசித்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : உள்ளூர் மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விஜய் ஷங்கர் – அடுத்த திட்டம் என்ன?

அதன்படியே இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளோம். இந்த போட்டியின் முதலில் நிறைய ரன்கள் சென்று விட்டன. 255 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் நல்ல ஒரு இலக்கு. சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும் ரஜத் பட்டிதார் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement