- Advertisement -
ஐ.பி.எல்

சத்தியத்தை காப்பாத்தல.. ஆர்.சி.பி அணியின் மேனேஜ்மென்ட் மீது எனக்கு கோபமும், வருத்தமும் இருந்தது – ரஜத் பட்டிதார் ஓபன்டாக்

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இம்முறை இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதன் காரணமாக இம்முறை நிச்சயம் ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்றும் என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேனேஜ்மென்ட் மீது கோபமும், வருத்தமும் இருந்தது : ரஜத் பட்டிதார்

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய 11 ஆட்டங்களில் 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் இந்த தொடரில் அந்த அணிக்கு மூன்று லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

- Advertisement -

அதில் ஒரு வெற்றியை பெற்றால் கூட பிளே ஆப் வாய்ப்பை பெங்களூரு அணி உறுதி செய்துவிடும். ரஜத் பட்டிதார் தலைமையிலான தற்போதைய பெங்களூரு அணியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என இரு தரப்பிலுமே மிகச் சிறப்பான வீரர்கள் இடம் பிடித்துள்ளதால் நிச்சயம் இம்முறை பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பலரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏலத்தின் போது தன்னை தேர்வு செய்யாத ஆர்.சி.பி அணியின் நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட கோபம் மற்றும் வருத்தம் குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தின் போது என்னை தொடர்புகொண்ட அணியின் நிர்வாகம் நாங்கள் உங்களை ஏலத்தில் எடுக்க இருக்கிறோம். தயாராக இருங்கள் என்று கூறியிருந்தது. ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் என்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை. அப்படி ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் எனக்கு வாக்கு கொடுத்து தேர்வு செய்யாமல் விட்டது எனக்கு கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : இந்தமுறை நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு அதை விட மாட்டோம்.. ஆஸியை எச்சரித்த – தெம்பா பவுமா

பின்னர் நான் உள்ளூர் போட்டியில் விளையாட ஆரம்பித்து விட்டேன். அதன்பிறகு பெங்களூரு அணியில் லிவ்னித் சிசோடியா காயம் காரணமாக விலகியதால் மாற்று வீரராக எனக்கு அழைப்பு வந்தது. அப்போது நான் மாற்றுவீராக அணியில் தேர்வு செய்யப்பட்டதை நினைத்து சற்று ஏமாற்றம் அடைந்தேன் என ரஜத் பட்டிதார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -