ஐ.பி.எல் போட்டிகளின் பெஸ்ட் பவுலர் இவர்தான்.. ஜஸ்ப்ரீத் பும்ரா இல்ல – ரஜத் பட்டிதார் தேர்வு

Rajat Patidar
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கைப்பற்றி அசத்தியது. 18 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு ஆர்.சி.பி அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஐ.பி.எல் போட்டிகளின் பெஸ்ட் பவுலர் : ரஜத் பட்டிதார் தேர்வு

இந்த தொடரின் முதலாவது போட்டி மார்ச் 28-ஆம் தேதி நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இந்த தொடரை ஆர்.சி.பி அணி வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. இம்முறையும் நிச்சயம் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணியானது தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த அளவிற்கு பெங்களூரு அணியும் மிகச்சிறந்த பலம் வாய்ந்த அணியாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் ரஜத் பட்டிதார் அவர்கள் இந்த ஐபிஎல் தொடரின் இடையே பிரத்யேக பேட்டி ஒன்றில் கலந்து கொள்கையில் ஐ.பி.எல் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்கள்? குறித்த பல்வேறு கேள்விகளுக்கு தனது பதிலை அளித்திருந்தார். அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயரை குறிப்பிடாமல் டேல் ஸ்டெயின் தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று தெரிவித்துள்ளார். அதோடு ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை சிறந்த கேப்டன் யார்? என்ற கேள்விக்கு தோனியை தாண்டி ரோகித் சர்மாவை அவர் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி நிச்சயம் இந்த விடயத்தில் கம்பேக் கொடுப்பாரு – அபிஷேக் நாயர் நம்பிக்கை

மேலும் ஐ.பி.எல் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்விக்கு விராட் கோலியின் பெயரையும், மிகச் சிறந்த பீல்டராக டூபிளெஸ்ஸிஸ் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஐ.பி.எல் போட்டிகளில் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக சுனில் நரேனையும் மிகச் சிறந்த பினிஷராக ஏ.பி டிவில்லியர்ஸை அவர் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement