வருண் சக்கரவர்த்தி நிச்சயம் இந்த விடயத்தில் கம்பேக் கொடுப்பாரு – அபிஷேக் நாயர் நம்பிக்கை

Abhishek Nayar and Varun
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான நம்பர் 1 பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தார். அதன் காரணமாக 2024 டி20 உலக கோப்பை மற்றும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இணைந்து விளையாடி இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக உச்சகட்ட பார்மில் இருந்த வருண் சக்கரவர்த்திக்கு தற்போது சரிவு ஏற்பட துவங்கியுள்ளது.

வருண் சக்கரவர்த்தியின் பார்ம் குறித்து பேசிய : அபிஷேக் நாயர்

அதாவது 2026 டி20 உலக கோப்பை தொடரில் அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக இருந்தாலும் அவரது எக்கனாமி 9.24 ஆக இருந்தது கவலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி அவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 48 ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

இதன் காரணமாக வருண் சக்கரவர்த்தியின் மிஸ்டரி ஸ்பின் இனி எடுபடாது என்றும் அவரை பேட்ஸ்மேன்கள் கண்டறிந்து அதிரடியாக விளையாட பழகிவிட்டனர் என்றும் சில முன்னாள் வீரர்கள் அவரது பந்துவீச்சு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் கொல்கத்தா அணியில் விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : ஒரு வீரராக வருண் சக்கரவர்த்தி தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட சவால்களை கடந்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவருடைய செயல்பாட்டிற்கு அணியின் நிர்வாகமும், பயிற்சியாளராகிய நாங்களும் முழு ஆதரவை வழங்குகிறோம். வருண் சக்கரவர்த்தி தற்போது சிறிய சரிவை சந்தித்திருக்கலாம். ஆனால் அவர் மன ரீதியாக மிக வலிமையாக இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 11-ஆவது வீரராக இன்று ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – அஜின்க்யா ரஹானே

எனவே இனிவரும் போட்டிகளில் நிச்சயம் அவர் பழையபடி தன்னுடைய மிஸ்ட்ரி ஸ்பின்னை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவார் என்பதில் எங்களுக்கு துளி அளவும் சந்தேகம் இல்லை. அவருக்கு நாங்கள் எப்போதுமே ஆதரவாக இருப்போம் என அபிஷேக் நாயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement