IPL2023 : பாதி ஐ.பி.எல் தொடரை தவறவிட இருக்கும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

RCB Faf Virat
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த 2023-ஆம் ஆண்டிற்கான 16-வது ஐபிஎல் தொடரானது மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. அதனை தொடர்ந்து மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.

CSK vs RCB 2

- Advertisement -

இம்முறை அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் விளையாடுவதால் ஒவ்வொரு அணிக்குமே ரசிகர்களின் ஆதரவு கட்டாயம் இருக்கும். அதிலும் குறிப்பாக இதுவரை நடைபெற்று முடிந்த அனைத்து சீசன்களிலும் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பை கைப்பற்றாமல் இருந்து வருகிறது.

இவ்வேளையில் இம்முறையாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என பெங்களூரு ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்தொடர் துவங்கும் முன்னதாக ஏற்கனவே ஜாஸ் ஹேசல்வுட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் முற்றிலுமாக காயத்திலிருந்து குணமடையவில்லை என்ற தகவல் வெளியாகியது.

Rajat Patidar 112 2

இவ்வேளையில் தற்போது மூன்றாவதாக ஒரு வீரர் காயம் அடைந்துள்ளது அந்த அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் கடந்த சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை மிடில் ஆர்டரில் வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் தற்போது காயம் காரணமாக முதல் மூன்று வாரங்கள் விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அப்படி ஒருவேளை முதல் மூன்று வாரங்கள் அவர் விளையாடவில்லை என்றால் பெங்களூரு அணியின் மிடில் ஆடரில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். ஏனெனில் ரஜத் பட்டிதார் விளையாட முடியாத நிலையில் விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக்கை தவிர வேறு அனுபவம் மற்ற வீரர்களே மிடில் ஆர்டரில் இடம்பெறுவார்கள்.

இதையும் படிங்க : இந்திய அணியில் அந்த ரெண்டு பேருக்கும் இடையே ஈகோ பிரச்சனை இருந்தது உண்மை தான் – பின்னணியை உடைத்த ஷிகர் தவான்

கடந்த சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்திருந்த அவரே இம்முறை பெங்களூரு அணியின் மிடில் ஆர்டரின் பலமாக கருதப்பட்டார். இந்நிலையில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது தற்போது பெங்களூர் அணியை பின்னுக்கு கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement