இந்திய அணியில் அந்த ரெண்டு பேருக்கும் இடையே ஈகோ பிரச்சனை இருந்தது உண்மை தான் – பின்னணியை உடைத்த ஷிகர் தவான்

Shikhar-Dhawan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியாவுக்காக தங்களது மிகச் சிறந்த திறமையால் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நிரந்தர இடத்தைப் பிடித்து பல வருடங்கள் இணைந்து விளையாடும் நட்சத்திர வீரர்கள் இரு துருவங்களாக உருவெடுப்பதும் அவர்களுடைய அவ்வப்போது பனிப்போர் நிகழ்வதும் வழக்கமாகும். அந்த காலத்திலேயே சுனில் கவாஸ்கர் – கபில் தேவ் ஆகியோருடைய விரிசல் இருந்ததாக நிறைய சலசலப்புகள் இருந்த நிலையில் நவீன கிரிக்கெட்டில் இந்திய பேட்டிங் துறையின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடையே இந்திய அணிக்குள்ளேயே போட்டி நிலவியதாக ஒரு கட்டத்தில் வதந்திகளாக நிறைய செய்திகள் வந்தன.

IND Rohit Viat Kohli Bhuvanewar Kumar KL Rahul

- Advertisement -

குறிப்பாக ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஒரு கோப்பையை கூட வெல்லாத போதிலும் 3 வகையான இந்திய அணியிலும் கேப்டனாக இருந்து வந்த சமயங்களில் அசால்ட்டாக 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா குறைந்தபட்சம் டி20 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்த விரும்பியதால் இருவரிடையே விரிசல் இருந்ததாக செய்திகள் வதந்திகளாக வந்தன. அதிலும் குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பையின் போது அது உச்சகட்டத்தை எட்டியதாகவும் அதன் காரணமாகவே 2021இல் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவிகளை படிப்படியாக ராஜினாமா செய்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பேற்றதாகவும் செய்திகள் வந்தன.

உடைத்த தவான்:
ஆனால் அதை அவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தாலும் நெருப்பின்றி புகையாது என்ற பழமொழிக்கேற்ப விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோருடைய விரிசல் இருந்தது உண்மை தான் என்பதையும் அதை 2019 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த பின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரையும் அழைத்து நேரடியாக பேசி சரி செய்ததாகவும் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர் ஸ்ரீதர் சமீபத்தில் தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2013 – 2019 வரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் இணைந்து எதிரணிகளை தெறிக்க விட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக ரசிகர்களால் மிஸ்டர் ஐசிசி என்று கொண்டாடப்படும் ஷிகர் தவான் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது விராட் மற்றும் ரோஹித் ஆகியோரிடையே ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சனை இருந்தது உண்மை தான் என்று பெயரை குறிப்பிடாமல் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சில ஈகோ பிரச்சனைகள் மனிதர்களிடையே இருப்பது சாதாரணமாகும். குறிப்பாக இந்தியாவுக்காக கிட்டத்தட்ட 220 நாட்கள் நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாடுகிறோம். அதனால் சில நேரங்களில் சிலருடன் தவறான புரிதல்கள் ஏற்படுவது சகஜமாகும். அது எங்களுக்கும் பொருந்தும். இங்கே நான் ரோகித் அல்லது விராட் ஆகியோரை பற்றி பேசவில்லை. பொதுவாக சொல்கிறேன். குறிப்பாக பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள் மற்றும் அணி மேனேஜர் உட்பட மொத்தம் 40 பேர் இந்திய அணியில் இருப்போம்”

dhawan 1

“அப்போது ஒருவர் மீது இன்னொருவருக்கு மகிழ்ச்சியான அபிப்ராயம் ஏற்படவில்லை எனில் சில சண்டைகள் ஏற்படலாம். இது சகஜமானது. அதே சமயம் அவர்களிடம் புரிதல் ஏற்படும் போது ஒருவருக்கொருவர் மீது இருக்கும் அன்பு ஏன் அதிகமாகக் கூடாது” என்று கூறினார். முன்னதாக இந்திய அணி நலனுக்காக நீங்கள் இருவரும் ஒரே பாதையில் நடக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ரோகித் – விராட் ஆகிய இருவரும் ஒரே கோட்டில் பயணிக்க துவங்கியதாக ஆர் ஸ்ரீதர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:SA vs WI : சிக்சர் மழை பொழிந்த தென்னாபிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ், ஜோடியாக சேர்ந்து 3 புதிய உலக சாதனை

அந்த வகையில் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சனை இருந்தாலும் நாளடைவில் அதுவே அவர்களிடையே அன்பாக மாறியதாக ஷிகர் தவான் சொல்லாமல் சொல்லியுள்ளார். மொத்தத்தில் கேப்டன்ஷிப் என்பது விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோரிடையே ஈகோ பிரச்சனையை ஏற்படுத்தி தற்போது ஓய்ந்துள்ளது இதிலிருந்து தெரிய வருகிறது.

Advertisement