தோனி மற்றும் ரோஹித்தின் சாதனையை சமன் செய்த ரஜத் பட்டிதார் – விவரம் இதோ

Rajat Patidar Captain
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு ஆண்டும் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 17 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட கைப்பற்றாமல் ஏமாற்றத்தை சந்தித்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரை ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி கைப்பற்றி 18-வது ஆண்டில் தங்களது முதல் கோப்பையை வென்று சாதித்தது.

தோனி, ரோஹித்தின் பட்டியலில் இணைந்த ரஜத் பட்டிதார் :

இப்படி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணி இம்முறை இந்தியாவில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றது. கடந்த ஆண்டு விளையாடிய அதே வீரர்களுடன் ஒரு சில மாற்றங்களை மட்டுமே செய்த ஆர்.சி.பி அணி இந்த முறையும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

- Advertisement -

லீக் சுற்று போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதோடு தங்களது முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் நேரடியாக தகுதி பெற்றிருந்தது. இவ்வேளையில் நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் ஒருமுறை கோப்பையை பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

அதோடு இரண்டாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையையும் ஆர்.சி.பி அணி வென்றிருந்தது. இந்நிலையில் இப்படி அடுத்தடுத்த ஐ.பி.எல் கோப்பைகளை வென்றதன் மூலம் ஆர்.சி.பி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் ஜாம்பவான் கேப்டனான தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது சாதனையை சமன் செய்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதையும் படிங்க : பைனலில் தோற்றது மட்டுமின்றி நள்ளிரவில் நடு ரோட்டில் 1 மணிநேரம் நின்ற குஜராத் வீரர்கள் – நடந்தது என்ன?

இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் அடுத்தடுத்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன்களாக தோனி(2010,11) மற்றும் ரோகித் சர்மா(2019,20) ஆகியோர் மட்டுமே இதுவரை இருந்து வந்தனர். இவ்வேளையில் அந்த பட்டியலில் மூன்றாவது கேப்டனாக ரஜத் பட்டிதார்(2025,26) இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement