சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியானது நேற்று தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி :
ஹோட்டல் அறைக்கு திரும்பிய வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் :
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 18 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இதன்மூலம் 2026 ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற ஆர்.சி.பி அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றி இரண்டாவது முறையாக கோப்பை வென்று தங்களது சாம்பியன்ஷிப்பை தக்க வைத்தது.
அதேவேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோற்ற குஜராத் அணி இரண்டாவது கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த தொடரில் சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என அசத்தலாக செயல்பட்டு வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் இருமுறை பெங்களூரு அணியிடம் இதே மைதானத்தில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்தை சந்தித்திருந்தது.
ஆனாலும் இந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த அவர்களுக்கு 12 கோடியே 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து நள்ளிரவில் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு திரும்பிய குஜராத் வீரர்களுக்கு சிறிய பிரச்சனை ஏற்பட்டது. அதாவது இந்த போட்டி முடிந்து நள்ளிரவில் ஹோட்டல் அறையை நோக்கி அவர்கள் அணி பேருந்தில் பயணித்தனர்.
இதையும் படிங்க : 15 வயதிலேயே ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தி முத்திரை பதித்த – வைபவ் சூர்யவன்ஷி
அப்போது திடீரென பேருந்தில் மின்சார பிரச்சனை காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பேருந்தில் இருந்து வீரர்கள் அனைவரும் பத்திரமாக கீழ் இறக்கப்பட்டனர். பின்னர் ஒரு மணி நேரம் அவர்கள் ரோட்டிலேயே காத்திருந்த வேளையில் மீண்டும் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஹோட்டல் அறைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.



