ஆர்சிபி’யின் 17 வருட சோகத்தை ஒரே சீசனில் தீர்த்த ரஜத் படிதார்.. ரோஹித்தின் மாஸ் சாதனை சமன்

Rajat Paditar
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ரஜத் படிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. ஜூன் மூன்றாம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக சந்தித்த தொடர் தோல்விகளை நிறுத்திய பெங்களூரு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் பெங்களூரு அணிக்காக ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் போன்ற தரமான வீரர்கள் விளையாடினார்கள். இருப்பினும் முக்கிய நேரங்களில் சொதப்பிய பெங்களூரு அணி கோப்பையை கோட்டை விட்டு வந்தது. அதனால் அந்த அணி மிகப்பெரிய விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களைச் சந்தித்தது.

- Advertisement -

17 வருட சோகம்:

குறிப்பாக விராட் கோலி இருக்கும் வரை ஆர்சிபி கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் இருந்தன. அதனால் கேப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த சூழ்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் 2022 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார்.

2024 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் மத்திய பிரதேசத்தை அவர் கேப்டனாக மிகச்சிறப்பாக வழி நடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். அதன் காரணமாக இந்த வருடம் ஆர்சிபி அணி நிர்வாகம் அவருவி கேப்டனாக நியமித்தது. அவரது தலைமையில் ஆரம்பம் முதலே சொல்லி அடித்த பெங்களூரு 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றுள்ளது.

- Advertisement -

ஒரே சீசனில் நிஜமாக்கிய படிதார்:

அந்த வகையில் ஆர்சிபி அணியின் 17 வருட சோகத்தை ரஜத் படிதார் ஒரே வருடத்தில் தீர்த்துள்ளார் என்றே சொல்லலாம். இந்த வருடம் காயம் காரணமாக முழுமையாக கேப்டன்ஷிப் செய்யாத அவர் லீக் சுற்றில் 11 போட்டிகளில் ஆர்சிபை அணியை தலைமைத் தாங்கினார். அதைத்தொடர்ந்து குவாலிபயர் 1 மற்றும் ஃபைனல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர் 13 போட்டிகளிலேயே ஆர்சிபி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வேதனையிலும் 2015க்குப்பின் சிஎஸ்கே நெருங்க முடியாத சாதனை.. நேர்மைக்காக தோனி படைக்கு கிடைத்த அங்கீகாரம்

இதன் வாயிலாக மிகவும் குறைந்தப் போட்டிகளில் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை ரஜத் படிதார் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 2013 சீசனில் ரிக்கி பாண்டிங் விலகிய பின் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா 13 போட்டிகளிலேயே மும்பை அணிக்காக கோப்பையை வென்று சாதனை படைத்தார். அவர்களுக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர் (2016 ஹைதராபாத்), ஹர்டிக் பாண்டியா (2022 குஜராத்) தலா 15 போட்டிகளில் வென்று 2வது இடத்தில் உள்ளனர்.

Advertisement