கேப்டனாக இல்லாத போதும் பட் கமின்ஸ் போல.. ரஜத் படிதாருக்கு அபராதம் விதித்த பிசிசிஐ.. காரணம் என்ன?

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 23ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 65வது போட்டியில் பெங்களூரு அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அதையும் சேர்த்து லீக் சுற்றுடன் வெளியேறிய ஹைதராபாத் தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்று இத்தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தது. மறுபுறம் பெங்களூரு அணி தங்களுடைய 4வது தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு சரிந்தது.

அதனால் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடத்தை பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெங்களூரு 90% நழுவ விட்டுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் தம்முடைய கையில் லேசான காயத்தை சந்தித்தார். அதன் காரணமாக முழுமையாக விளையாட முடியாத நிலையை சந்தித்த அவர் இம்பேக்ட் வீரராக மட்டும் களமிறங்கும் முடிவை எடுத்தார்.

- Advertisement -

கேப்டனாக இல்லாத போதிலும்:

எனவே அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அவருடைய தலைமையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஆர்சிபி அணி பவுலிங் செய்து முடிக்கவில்லை. அதன் காரணமாக ஜிதேஷ் சர்மாவுக்கு தண்டனையைக் கொடுக்காத பிசிசிஐ ரஜத் படிதாருக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அதற்கு 2 காரணங்கள் உள்ளது. முதல் காரணம் ஏற்கனவே இந்த வருடம் ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பௌலிங் செய்து முடிக்காததால் கேப்டன் ரஜத் படிதாருக்கு முதல் முறையாக 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்காததால் கேப்டனுக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பிசிசிஐ அபராதம்:

இருப்பினும் அந்த கேப்டன் ஜிதேஷ் சர்மா தற்காலிக ஒரு போட்டியில் மட்டுமே ஆர்சிபி அணியை தலைமைத் தாங்கினார். அதனால் அவருக்கு தண்டனை வழங்காத பிசிசிஐ இந்த வருடம் ஆர்சிபி அணியின் நிரந்தர கேப்டன் ரஜத் படிதாருக்கு 24 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது. மேலும் 2வது முறையாக ஆர்சிபி தவறு செய்துள்ளதால் ஜிதேஷ் சர்மா, விராட் கோலி உட்பட அந்த அணியில் உள்ள மற்ற அனைத்து தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 94 ரன்ஸ் அடிச்சதெல்லாம் பத்தாது.. நான் இன்னும் நிறைய செய்ஞ்சிருக்கனும் – ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேட்டி

இது போக ஹைதராபாத் அணியும் இந்த வருடம் முதல் முறையாக இந்தப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை. எனவே அந்த அணியின் கேப்டன் பட் கமின்ஸ்க்கு மட்டும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement