லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 65-வது போட்டியில் விளையாடிய பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஆர்.சி.பி அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
என்னுடைய இந்த ஆட்டத்தில் திருப்தி இல்லை : இஷான் கிஷன்
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. பின்னர் 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணி 189 ரன்களை மட்டுமே குவிக்க சன் ரைசர்ஸ் அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது சன்ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக இஷான் கிஷன் 48 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 94 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய இஷான் கிஷன் கூறுகையில் :
இந்த போட்டியின் போது எங்களது அணியின் துவக்க வீரர்கள் இருவருமே மிகச் சிறப்பாக விளையாடியதால் என்னுடைய ஆட்டம் எளிதானது. இந்த போட்டியின் போது முமென்ட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். இந்த போட்டியின் ஆரம்பத்தில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியான துவக்கத்தை கொடுக்கவே இந்த மைதானத்தில் 200 ரன்களை அடிக்க முடியும் என்று நினைத்தேன்.
இந்த போட்டியை பொறுத்தவரை நான் என்னுடைய நல்ல ஷாட்டுகளை விளையாட முயற்சித்தேன். அப்படி ஒரு சில நல்ல ஷாட்டுகள் வந்ததும் எனக்கு நம்பிக்கையும் அதிகரித்தது. இந்த மைதானத்தில் நல்ல ஷாட்டுகளை விளையாடினால் ரன்களை குவிக்க முடியும் என்றும் தெரிந்தது. இந்த ஆட்டத்தில் நான் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தாலும் எனக்கு அது பெரியளவில் மகிழ்ச்சியை தரவில்லை.
இதையும் படிங்க : இந்த தொடரில் இருந்து வெளியேறினாலும் அற்புதமான ஒரு வீரரை கண்டுபிடிச்சிருக்கோம் – பேட் கம்மின்ஸ் மகிழ்ச்சி
ஏனெனில் நான் இன்னும் சன்ரைசர்ஸ் அணிக்காக பல போட்டிகளில் நிறைய ரன்களை குவித்திருக்க வேண்டும். இருந்தாலும் இந்த தொடரில் இதனை பாடமாக எடுத்துக்கொண்டு இனிவரும் தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கடினமாக உழைப்பேன் என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.



