- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2025: ஆர்சிபி புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட படிதார்.. வாழ்த்திய விராட் கோலி ரசிகர்களுக்கு கோரிக்கை

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர் ரஜத் படிதார் தங்களுடைய புதிய கேப்டனாக செயல்படுவார் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை 27 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 799 ரன்கள் விளாசியுள்ளார். குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் அதிவேகமான சதத்தை அடித்து வரலாறு படைத்த அவர் பெங்களூரு அணியின் ஒரு மகத்தான வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 2024 இங்கிலாந்து தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் 2024 – 25 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் அபாரமாக விளையாடிய ரஜத் மத்தியப் பிரதேச அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். அதனால் டு பிளேஸிஸ்க்கு பின் பெங்களூரு அணி அவரை தங்கள் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

புதிய கேப்டன்:

இது பற்றி ரஜத் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள இது எனக்கு சிறந்த வாய்ப்பு. அவருடைய அனுபவம் என்னுடைய தலைமைப் பண்புக்கு உதவும். அவருடன் நிறைய பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள எனக்கு அவரைப் பற்றித் தெரியும். அவருடைய அனுபவம் கண்டிப்பாக என்னுடைய கேப்டன்ஷிப் பொறுப்புக்கு உதவும்” எனக் கூறினார்.

மேலும் தம்மை நம்பி இந்தப் பொறுப்பை கொடுத்துள்ள ஆர்சிபி அணிக்கு நன்றி தெரிவித்துள்ள அவர் பெங்களூரு ரசிகர்களின் முதல் கோப்பை கனவை நிறைவேற்றுவேன் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். அவரை வரவேற்றுள்ள நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம் என்று கூறியுள்ளார். இது பற்றி விராட் கோலி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

வாழ்த்திய கோலி:

“ரஜத் முதலில் உங்களை வாழ்த்த விரும்புகிறேன். இந்த அணியில் உங்களுடைய செயல்பாடுகளை கொடுத்து நீங்களும் வளர்ந்ததற்கு நன்றி. இந்தியா முழுவதிலும் இருக்கும் பெங்களூரு அணி ரசிகர்கள் இதயத்தில் நீங்கள் இடத்தைப் பிடித்துள்ளீர்கள். இந்தப் பொறுப்புக்கு நீங்கள் மிகவும் தகுதியானவர். இந்த நேரத்தில் நானும் சக அணி வீரர்களும் உங்கள் பின்னால் நிற்போம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்”

இதையும் படிங்க: தாதா கங்குலியை தாண்டி தல தோனியை சமன் செய்த கிங் விராட் கோலி – விவரம் இதோ

“இந்தப் பொறுப்பில் உங்களுக்கு எங்களுடைய அனைவரின் ஆதரவு இருக்கும்” என்று கூறினார். மேலும் ரசிகர்களையும் அவருக்கு ஆதரவு கொடுக்குமாறு விராட் கோலி கேட்டுக்கொண்டார். ரஜத் தலைமையில் 2025 ஐபிஎல் தொடரை அதிரடியாகத் துவங்கி வெற்றி பெறுவதற்கு காத்திருப்பதாகவும் விராட் கோலி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -