சென்னைக்கு எதிராக ” பிங்க் ” உடையில் களமிறங்கும் ராஜஸ்தான் ..! – வண்ணங்கள் எதை குறிக்கிறது தெரியுமா ?

rahane
- Advertisement -

நடந்து வரும் ஐ .பி.எல் தொடரில் நாளை (மே 11 ஆம் தேதி) ராஜஸ்தான் அணி சென்னை அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய பிங்க் நிற சீருடையில் (ஜெர்சி) களமிறங்க உள்ளதாம். மக்கள் மத்தியில் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சீருடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Rajasthan_Royals

- Advertisement -

இந்த புதிய முயற்சியை ராஜஸ்தான் மாநிலத்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தேசிய புற்றுநோய் தடுப்பு கட்டமைப்பு போன்ற அமைப்புகள் சேர்ந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாம். இந்த புதிய சீருடையில் பிங்க், மெரூன் (burgundy), நீளம்(teal ) மூன்று வண்ணங்கள் பிரதிபலிக்கிறது. இந்த மூன்று வண்ணங்கலும் 3 வகை புற்று நோயை குறிக்கிறதாம்.

பிங்க் வண்ணம் – மார்பக புற்றுநோயை குறிக்கும் விதத்திலும்
நீல வண்ணம் – கர்பப்பை புற்றுநோயை குறிக்கும் விதத்திலும்
மெரூன் வண்ணம் – வாய் புற்றுநோயை குறிக்கும் விதத்திலும்

இந்த மூன்று வண்ணங்கள் ராஜஸ்தான் அணியின் புதிய சீருடையில் வெளிப்படுத்திக்கிறது என்று அந்த அணியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rajasthan

மேலும் இந்த விழிப்புணர்வு பற்றி ராஜஸ்தான் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே தெரிவிக்கையில் “ஒரு விளையாட்டு வீராக இந்த சமூகத்தை புற்றுநோய் இல்லா சமூகமாக உருவாக்குவதில் இது எங்களுடைய ஒரு சிறிய முயற்சிதான், நாங்கள் சிறப்பாக விளையாடி எங்களால் முடிந்த வரை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வோம் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement