பட்லருக்கு பதிலாக விளையாடப்போகும் புதிய வீரர் இவர்தான். இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் பிளேயிங் லெவன் இதோ

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருக்கும் 7வது லீக் மேட்ச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. வான்கடே மைதானம் ஆனது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் இன்றும் ரன் மழையை எதிர்பார்க்கலாம். ஏனெனில் இரு அணிகளிலுமே தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இதுவரை இவ்விரு அணிகளுக்கும் இடையில் 22 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 11 முறை வெற்றி பெற்றுள்ளன.

stokes

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி இருக்கிறார். அதே சமயம் குவாரன்டைன் முடிந்து டேவிட் மில்லரும், ஆண்ட்ரூ டையும் ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளனர். ஸ்டோக்ஸ் விலகலால் ராஜஸ்தான் அணிக்கு ஓப்பனிங்கில் ஆடப்போகும் பிளேயர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தீர்வாக அந்த அணியில் மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜாஸ் பட்லரை ஓபனிங் ஆட வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

ஏனெனில் ஜாஸ் பட்லர் ஏற்கனவே இங்கிலாந்திற்காக ஓப்பனிங்கில் விளையாடிக் கொண்டிருந்தவர். ஜாஸ் பட்லர் ஓபனிங் ஆடுவதால் அவர் விளையாடிக்கொண்டிருந்த மிடில் ஆர்டரில் டேவிட் மில்லர் களமிறங்குவார். எனவே ஸ்டாக்ஸின் விலகல் அந்த அணியின் பேட்டிங் பலத்தை குறைக்கப் போவதில்லை. ஆனால் அந்த அணியின் நட்சத்திர பௌலரான ஜோப்ரா ஆர்ச்சர், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இப்போதுதான் சிறிய அளவிலான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

buttler 1

அதனால் இப்போதைக்கு அவர் அணியுடன் இணைவதற்கான வாய்ப்பு குறைவு. அவர் ராஜஸ்தான் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் பௌலிங் யூனிட்டை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் யூனிட்டோடு ஒப்பிடும்போது பலம் குறைந்ததாகவே காணப்படுகிறது. நக்குல் பால் ஸ்பெஷலிஷ்ட்டான ஆண்ட்ரூ டையின் வருகை ராஜஸ்தான் அணியின் பௌலிங் யூனிட்டிற்கு வலு சேர்ப்பதாக இருந்தாலும், அவருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம்.

- Advertisement -

ஏனெனில் டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ப்ரித்வி ஷா இதுவரை ஆறு முறை இடது கை வேகப்பந்து வீச்சாளரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். எனவே அவரை சீக்கிரம் வெளியேற்க்காக இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான முஷ்டஃபிசுர் ரஹ்மான் மற்றும் சேட்டன் சக்காரியாவையே அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுப்பார். ராஜஸ்தான் அணி டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய கடைசி ஐந்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

Miller

குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு முறை டெல்லியை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை. ஆனால் இப் போட்டி நடைபெறும் வான்கடே மைதானம் பேட்டிங்கிற்க்கு இருக்கு சாதகமான ஆடுகளம் என்பதாலும் ஜாஸ் பட்லரின் ஓப்பனிங், டேவிட் மில்லரின் மிடில் ஆர்டர் ரோல் மேலும் கடந்த போட்டியில் சதம் விளாசி, சூப்பர் ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் ஆட்டத்தினால் இந்த போட்டியில் ரன் மழை பொழியும் என்பது நிச்சயமாக தெரிந்த ஒன்று.

ராஜஸ்தான் அணி ப்ளேயிங் லெவன் :

ஜாஸ் பட்லர், மனன் வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேட்டியா, ஷிவம் தூபே, ஸ்ரேயாஸ் கோபால், கிறிஸ் மோரிஸ், முஷ்டபிசுர் ரஹ்மான்,சேட்டன் சக்காரியா.

Advertisement