தினேஷ் கார்த்திக் வேண்டுமென்றே இதை செய்கிறார்..! இதனால் தான் தோட்றோம் ..! வார்னே பகிரங்க குற்றசாட்டு..!

warne
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் முதல் தகுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதி சுற்றிற்கு தகுதி பெற்றது சென்னை அணி. மேலும் கடந்த புதன் கிழமை (மே 23) நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இன்று நடைபெறவுள்ள ஹைதராபாத் அணியுடனான இரண்டாவது தகுதி சுற்றில் விளையாடவுள்ளது கொல்கத்தா அணி.
warne

ராஜஸ்தான் அணியுடனான எலிமினேட்டர் போட்டியின் போது கொல்கத்தா அணியின் கேப்டின் தினேஷ் கார்த்திக் செய்த செயல் எரிச்சலூட்டியதாக ராஜஸ்தான் அணியின் அறியுரையாளரும், முன்னாள் ஆஸ்திரேலியா சூழல் பந்து வீச்சாளருமான ஷேன் வானே கூறியுள்ளார்.கடந்த புதன் கிழமை நடந்த போட்டியின் போது முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 வர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்திருந்தது. ஒருகட்டத்தில் 8 வர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கொல்கத்தா அணி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரசெல்சின் பொறுப்பான ஆட்டத்தால் நல்ல ரன்களை எட்டியது.

- Advertisement -

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 வர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த போதும் 144 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தான் காரணம் என்று ராஜஸ்தான் ரசிகர்கள் புலமை வந்தனர். அதே போன்று ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு தினேஷ் கார்த்திக் செய்த நேர விரயம் தான் காரணம் என்று ராஜஸ்தான் அணியின் அறியுரையாளராக இருக்கும் ஷேன் வார்னே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் பதிவிட்டது என்னவென்றால், கையில் 9 விக்கெட்டுகள் இருக்க 60 பந்துகளில் 83 ரன்கள், சஞ்சீவ் சாம்சன் கணித்தது போல 70 ரன்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டிய நிலையில், கேப்டன் அஜிங்கியாவும் நிதானமான ஆட்டத்தை விளையாடிய சமயத்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் வேண்டுமென்றே நேரத்தை விரையம் செய்தது எரிச்சலை ஊட்டுகிறது என்பது போல ட்வீட் செய்துள்ளார்.

Advertisement